என்எல்சி நிர்வாக அலுவலகம் முற்றுகை – பி.ஆர்.பாண்டியன் கைது

Asianet News Tamil  
Published : Oct 19, 2016, 02:59 AM ISTUpdated : Sep 19, 2018, 02:42 AM IST
என்எல்சி நிர்வாக அலுவலகம் முற்றுகை – பி.ஆர்.பாண்டியன் கைது

சுருக்கம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்து, என்எல்சி அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக சென்ற பி.ஆர்.பாண்டியன் கைது செய்யப்பட்டார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்து, அனைத்து விவசாய சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் நெய்வேலியில் பேரணி மேற்கொண்டார். என்.எல்.சி. நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட பி.ஆர். பாண்டியன் தலைமையில் விவசாயிகள் முயற்சி செய்தனர்.

என்.எல்.சி.யில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை கர்நாடகத்துக்கு வழங்கக்கூடாது என அவர்கள் வலியுறுத்தினர்.  இந்த பேரணியில், ஏ.ஐ.டி.யு.சி. உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் பங்கேற்றனர்.  என்எல்சி அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பி.ஆர்.பாண்டியன் உள்பட 50க்கு மேற்பட்டோரை, போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

PREV
click me!

Recommended Stories

DMK NDA Alliance : பாஜகவுக்கு ஓகே.. 22 எம்பிக்களுடன் காத்திருக்கும் திமுக.. தமிழக அரசியலில் திடீர் ட்விஸ்ட்.!
TN Politics: வன்னியரசு எனும் நான்.! யார் இந்த திருமாவின் படைத்தளபதி?!