இடைத்தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் நேர்க்காணல் – க.அன்பழகன் அறிவிப்பு

Asianet News Tamil  
Published : Oct 19, 2016, 02:28 AM ISTUpdated : Sep 19, 2018, 02:42 AM IST
இடைத்தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் நேர்க்காணல் – க.அன்பழகன் அறிவிப்பு

சுருக்கம்

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, தஞ்சை ஆகிய தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19ம் தேதி நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதை தொடர்ந்து அனைத்து கட்சிகளும் தேர்தலில் போட்டியிட தயாராகி கொண்டு வருகின்றன.

இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடுவோர் அண்ணா அறிவாலயத்தில், அக்டோபர் 20ம் தேதிக்குள் விருப்ப மனு தாக்கல் செய்யலாம். அக்டோபர் 21ம் தேதி காலை 10 மணிக்கு வேட்பாளர்களுக்கான நேர்க்காணல் நேர்க்காணல் நடைபெறும் என்று திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.

முன்னதாக, சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தஞ்சை, அவரக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக திமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தஞ்சை, கரூர், மதுரை மாவட்ட செயலாளர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

PREV
click me!

Recommended Stories

DMK NDA Alliance : பாஜகவுக்கு ஓகே.. 22 எம்பிக்களுடன் காத்திருக்கும் திமுக.. தமிழக அரசியலில் திடீர் ட்விஸ்ட்.!
TN Politics: வன்னியரசு எனும் நான்.! யார் இந்த திருமாவின் படைத்தளபதி?!