ஓங்குகிறது அப்பாவு கை...!! அதிரடி சரவெடி திருப்பம்...!!

By Ezhilarasan BabuFirst Published Oct 4, 2019, 7:01 PM IST
Highlights

தபால் வாக்குகள் 1508 , மற்றும் மூன்று சுற்று வாக்குகள் 16058 வாக்குகள் மீண்டும் எண்ணப்பட்டது. இந்த பணிகள் நிறைவடைந்த நிலையில், ஒவ்வொரு சுற்றிலும் எண்ணப்பட்ட மறு வாக்கு எண்ணிக்கையின் முடிவுகள் சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் வசம் ஒப்படைக்கப்பட்டது,அதன் பின்னர் அந்த முடிவுகள் விபரம் தேர்தல் வழக்கை விசாரித்த நீதிபதி  ஜெயச்சந்திரன் அவர்களிடம் ஒப்படைக்க பட்டது,

ராதாபுரம் தொகுதி  மறுவாக்கு எண்ணிக்கை நடந்து முடிந்துள்ள நிலையில் அதில் திமுக வேட்பாளர் அப்பாவின் கை ஒங்கி உள்ளதாக உறுதி செய்யப்படாத தகவல் கசிந்துள்ளது. முடிவுகளை வெளியிடக் கூடாது என உச்சநீதிமன்றம்  தடை விதித்துள்ளதால் உறுதியாக தகவல்கள் கிடைக்க வில்லை.

தமிழக சட்டமன்றத்துக்கு கடந்த 2016ல் நடந்த பொதுத்தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட இன்பதுரை, 49 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.அவரது வெற்றியை எதிர்த்து  திமுக சார்பில் போட்டியிட்ட அப்பாவு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ராதாபுரம் தொகுதியில் பதிவான தபால் வாக்குகள் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான கடைசி மூன்று சுற்று வாக்குகளை மறு எண்ணிக்கை செய்ய உத்தரவிட்டது...அதனடிப்படையில் இன்று உயர்நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் உயர்நீதிமன்ற பதிவாளர் மேற்பார்வையில் 2016 ல் பதிவான தபால் வாக்குகள் மற்றும் கடைசி மூன்று சுற்று வாக்குகள் எண்ணிக்கை நடைபெற்றது.

இதற்கிடையில் இன்பதுரை தரப்பில், மறு வாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிட்ட உயர் நீதிமன்ற உத்தரவிற்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் சிறப்பு அப்பீல் மனு தாக்கல் செய்யப்பட்டது, இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா அமர்வில் விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் நடைபெற்று வரும் மறு வாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட தடைவிதித்து வழக்கு விசாரணையை வரும் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது. உச்சநீதிமன்ற உத்தரவால் தற்போது உயர்நீதிமன்றத்தில் மறு வாக்கு எண்ணிக்கை நடைபெற்றாலும் அதன் முடிவுகளை வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது... இந் நிலையில் இன்று நடைபெற்ற மறு வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்தது.

 

தபால் வாக்குகள் 1508 , மற்றும் மூன்று சுற்று வாக்குகள் 16058 வாக்குகள் மீண்டும் எண்ணப்பட்டது. இந்த பணிகள் நிறைவடைந்த நிலையில், ஒவ்வொரு சுற்றிலும் எண்ணப்பட்ட மறு வாக்கு எண்ணிக்கையின் முடிவுகள் சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் வசம் ஒப்படைக்கப்பட்டது, அதன் பின்னர் அந்த முடிவுகள் விபரம் தேர்தல் வழக்கை விசாரித்த நீதிபதி  ஜெயச்சந்திரன் அவர்களிடம் ஒப்படைக்க பட்டது, இந் நிலையில் முடிவு வெளியிட நீதிமன்றம் தடை விதித்துள்ளதால் செய்தி வெளியிட தயங்கிவருகின்றனர். இந்த வாக்கு எண்ணிக்கையை பொருத்தவரையில்  திமுக வேட்பாளர் அப்பாவின் கை ஒங்கி ஒருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

click me!