ராமநாதபுரம் மக்களவை தொகுதி கூட்டணி கட்சிக்கு ஒதுக்கீடு.. வேட்பாளர் யார் தெரியுமா? எந்த சின்னத்தில் போட்டி?

By vinoth kumar  |  First Published Feb 25, 2024, 8:02 AM IST

ஆளும் திமுக அரசு முதல்கட்ட பேச்சுவார்த்தை நிறைவு பெற்றதை அடுத்து 2ம் கட்ட பேச்சுவார்த்தை நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் பங்கேற்றன.


திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் மக்களவை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் நவாஸ் கனியே மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட்ட உள்ள நிலையில் அதிமுக, பாஜக கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், ஆளும் திமுக அரசு கூட்டணி கட்சிகளுடன் முதல்கட்ட பேச்சுவார்த்தை நிறைவு பெற்றதை அடுத்து 2ம் கட்ட பேச்சுவார்த்தை நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் பங்கேற்றன. இதனையடுத்து, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும் ஒதுக்கப்பட்டு தொகுதிப் பங்கீடு கையெழுத்தானது.

Tap to resize

Latest Videos

undefined

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சித் தலைவர் காதர் மொய்தீன்:  திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு ஒதுக்கப்பட்ட ராமநாதபுரம் தொகுதியில் கடந்த மக்களவை தேர்தலில் வென்று 5 ஆண்டுகாலம் சிறப்பாக பணியாற்றி வரும் நவாஸ் கனியே மீண்டும் அங்கு போட்டியிடுவார் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். எங்கள் கட்சி மட்டுமல்லாமல், திமுக கட்சியினரும் அதையே பரிந்துரை செய்துள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

தேர்தல் சின்னத்தை பொறுத்தவரை இந்திய முஸ்லீம் லீக் கட்சி ஏணி சின்னத்திலேயே போட்டியிடும். இதனை தொகுதி பங்கீடு உடன்பாட்டில் உறுதி செய்யப்பட்டுள்ளது என காதர் மொய்தீன் கூறியுள்ளார். 

அதேபோல் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் பேட்டியளிக்கையில்: 2019-ம் ஆண்டு போட்டியிட்டது போல நாமக்கல் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறோம். அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. யார் போட்டியிடுவார் என்பது குறித்து செயற்குழு முடிவெடுக்கும் என்றார்.

click me!