அரசியல் பெண்களுக்கு எப்போதும் போர்க்களம் தான். ஒவ்வொரு நாளும் நெருப்பாற்றை நீந்திதான் கடக்க வேண்டியிருக்கிறது. பெண்களின் உழைப்பும், திறமையும், செல்வாக்கும் அவ்வளவு எளிதாக அங்கீகரிக்கப்படுவதில்லை என்பது உண்மைதான்.
விஜயதரணி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்திருப்பது இந்த தேசத்திற்கு செய்யும் மாபெரும் துரோகம் என ஜோதிமணி காட்டமாக விமர்சித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதியில் எம்எல்ஏவாக 3வது முறையாக இருந்து வருகிறார். தமிழக சட்டமன்றத்தில் காங்கிரஸ் முதன்மை கொறடா, கட்சியில் அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளர் உள்ளிட்ட பதவிகளை விஜயதரணி வகித்து வந்தார். இந்நிலையில், விஜயதரணிக்கு தமிழக அரசியலை விட டெல்லி அரசியலில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். ஆகையால், மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டிருந்த நிலையில் மறுக்கப்பட்டது. இதனால், கடந்த சில மாதங்களாகவே காங்கிரஸ் கட்சி மீது விஜயதரணி அதிருப்தியில் இருந்துள்ளார். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் அண்ணாமலை பாஜகவில் விஜயதரணியை இணைத்து காங்கிரஸ் தேசிய தலைமைக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
இதையும் படிங்க: விளவங்கோடு எம்எல்ஏ விஜயதரணி பாஜகவில் இணைந்தார்.. அதிர்ச்சியில் தமிழக காங்கிரஸ்!
இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விஜயதரணி: காங்கிரஸ் கட்சியில் கிடைத்த மோசமான அனுபவத்தால் பாஜகவில் இணைந்துள்ளேன். காங்கிரஸில் இருந்து பாஜகவில் இணைந்ததில் மகிழ்ச்சி. தலைமைப் பதவியில் பெண்கள் வர முடியாத சூழல் காங்கிரஸில் இருந்து வருகிறது. பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கட்சியாக பாஜக உள்ளது. மிகப்பெரிய தலைவர் பிரதமர் மோடியின் கீழ் இந்தியா பெரும் வளர்ச்சியை கண்டுள்ளது என விஜயதரணி கூறியிருந்தார். இதனையடுத்து விஜயதாரணியை கட்சியில் இருந்து நீக்கி காங்கிரஸ் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் விஜயதாரணி காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தது குறித்து ஜோதிமணி கருத்து தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இதற்காக தான் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தேன்.. விஜயதரணி கொடுத்த விளக்கம்!
இதுதொடர்பாக கரூர் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: தலைவர் ராகுல்காந்தி நாட்டைக் காக்க இறுதி யுத்தத்தை நடத்திக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் விஜயதரணி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்திருப்பது இந்த தேசத்திற்கு செய்யும் மாபெரும் துரோகம்.
தலைவர் ராகுல்காந்தி நாட்டைக் காக்க இறுதி யுத்தத்தை நடத்திக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ,விஜயதரணி காங்கிரஸ் கட்சியில் இருந்துவிலகி பாஜகவில் இணைந்திருப்பது ,இந்த தேசத்திற்கு செய்யும் மாபெரும் துரோகம்.
அரசியல் பெண்களுக்கு எப்போதும் போர்க்களம் தான். ஒவ்வொரு நாளும் நெருப்பாற்றை…
அரசியல் பெண்களுக்கு எப்போதும் போர்க்களம் தான். ஒவ்வொரு நாளும் நெருப்பாற்றை நீந்திதான் கடக்க வேண்டியிருக்கிறது. பெண்களின் உழைப்பும், திறமையும், செல்வாக்கும் அவ்வளவு எளிதாக அங்கீகரிக்கப்படுவதில்லை என்பது உண்மைதான். ஆனால் அதற்காக கொண்ட கொள்கையில் சமரசம் செய்துகொள்வதையும், நாம் இவ்வளவு காலம் எதிர்த்து நின்ற பாஜகவின் பாசறைக்குச் செல்வதையும் எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என ஜோதிமணி கூறியுள்ளார்.