ஒப்பந்தத்தை கிழித்து மூஞ்சில் எறிந்து விட்டு வாருங்கள்.. திமுகக்கு எதிராக மமகவில் அதிருப்தி குரல்கள்..!

By vinoth kumarFirst Published Mar 2, 2021, 5:17 PM IST
Highlights

திமுக கூட்டணியில் உள்ள மனித நேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதற்கு அக்கட்சியினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திமுக கூட்டணியில் உள்ள மனித நேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதற்கு அக்கட்சியினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திமுக கூட்டணியில் உள்ள மனித நேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தத்தில் அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கையெழுத்திட்டார்.இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்;- திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி 2 தொகுதிகளில் போட்டியிடும். எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது குறித்தும், எந்ததெந்தத் தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்தும் பின்னர் முடிவு செய்யப்படும். நாட்டு நலனுக்காகவும், தமிழக நலனுக்காகவும் தியாக மனப்பான்மையோடு இதற்கு ஒப்புக் கொண்டிருக்கிறோம் என்று தெரிவித்திருந்தார்.

மனித நேய மக்கள் கட்சி இரண்டாம் நிலை நிர்வாகிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. TMMKMEDIA என்ற அவர்களது முக நூல் பக்கத்திலேயே இதுகுறித்த கடுமையான கருத்துகளை வெளிப்படையாக பதிவிட்டு வருகின்றனர். அதில், ஒப்பந்தத்தை கிழித்து மூஞ்சில் எறிந்து விட்டு வாருங்கள். அறிவாலயம் வட மரைக்காயர் தெருவை தேடி வரும்” என்று மஜித் கான் என்பவர் தெரிவித்துள்ளார்,

முகமது ஷமீர் என்பவர், “பாஜகவையும் அடிமை அதிமுகவையும் எதிர்க்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து கிடையாது. அதற்காக மூச்சுக்கு முன்னூறு தடவை தளபதி தளபதி என்றும் அடுத்த முதல்வர் என்று ஸ்டாலினை புகழ்ந்ததை ஏற்றுக்கொள்ள மனம் கனக்கிறது. கூடுதல் இடம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் திமுக கூட்டணியில் இல்லாத, கூட்டணிக்கு வர விரும்பிய சகோதர கட்சிகளை கடுமையாக விமர்சிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும், பேசவும் செய்தோம்.

மேலும், ஒரு காலத்தில் முஸ்லிம் லீக் இரண்டு சீட்டிற்கு திமுக ,அதிமுகவிடம் மாறி மாறி பிச்சை எடுக்கிறது கெத்தா பேசி அரசியலில் குதித்த நாம் இன்று என்ன செய்துகொண்டிருக்கிறோம்? என்று சன்னி என்பவர் கேள்வி எழுப்பியிருக்கிறார். இப்படி மமகவின் முடிவை எதிர்த்தும் வேதனை தெரிவித்தும் பல்வேறு கருத்துகள் பதிவிட்டு வருகின்றனர். 

இந்நிலையில், சசிகலாவை சந்திக்க ஹைதர் அலி நேரம் கேட்டிருந்தார். இன்று அவருக்கு நேரம் தரப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சசிகலாவை சந்தித்துவிட்டு அவர் அமமுக பொதுச் செயலாளர் தினகரனையும் சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

click me!