திமுக கூட்டணி கட்சிகளான மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகளின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு..!

By karthikeyan VFirst Published Mar 11, 2021, 9:52 PM IST
Highlights

திமுக கூட்டணி கட்சிகளான மதிமுக மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள், அவற்றிற்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளன.
 

திமுக கூட்டணி கட்சிகளான மதிமுகவிற்கு 6 தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும் ஒதுக்கின. இந்நிலையில், அந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை இரு கட்சிகளும் வெளியிட்டுள்ளன.

மதிமுக வேட்பாளர்கள்:

1. மதுராந்தகம் - மல்லை சத்யா

2. சாத்தூர் - ரகுராமன்

3. அரியலூர் - சின்னப்பா

4. பல்லடம் - முத்துரத்தினம்

5. வாசுதேவநல்லூர் - சதன் திருமலைக்குமார்

6. மதுரை தெற்கு - பூமிநாதன்

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி வேட்பாளர்கள்:

1. கடையநல்லூர் - கே.ஏ.எம். முகமது அபுபக்கர்

2. வாணியம்பாடி - எம்.முகமது நயீம்

3. சிதம்பரம் - ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் ரப்பானி
 

click me!