காங்கிரஸ் - பாஜக இடையே 5 தொகுதிகளில் நேரடி போட்டி... கன்னியாகுமரியில் 2 தொகுதிகளில் பலப்பரீட்சை..!

By Asianet TamilFirst Published Mar 11, 2021, 9:01 PM IST
Highlights

தமிழக சட்டப்பேரவைகளில் திமுக, அதிமுக கூட்டணிகளில் தேசிய கட்சிகளான பாஜகவும் காங்கிரஸ் கட்சியும் ஐந்து தொகுதிகளில் நேரடியாக மோதிக்கொள்கின்றன. 
 

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. காங்கிரஸ் கட்சி எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது தொடர்பாக திமுக குழுவுடன் காங்கிரஸ் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.  
இதன்படி பொன்னேரி, வேளச்சேரி, தென்காசி, ஸ்ரீபெரும்புதூர், சோளிங்கர், மேலூர், காரைக்குடி, விளவங்கோடு, ஓமலூர், சிவகாசி, ஊத்தங்கரை, குளச்சல், ஈரோடு கிழக்கு, அறந்தாங்கி,  விருத்தாசலம், உடுமலைப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவாடானை, மயிலாடுதுறை, கோவை தெற்கு, கிள்ளியூர், நாங்குநேரி, ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீவைகுண்டம், உதகை ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. இதில் குளச்சல், விளவங்கோடு, கோவை தெற்கு, காரைக்குடி, உதகை ஆகிய 5 தொகுதிகளில் காங்கிரஸ் - பாஜக இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. 
 

click me!