திமுக நடத்தும் அனைத்து கட்சி கூட்டத்தினால் எந்த பயனும் ஏற்படாது...!! தமிழிசை பேட்டி

Asianet News Tamil  
Published : Oct 24, 2016, 06:09 AM ISTUpdated : Sep 19, 2018, 03:17 AM IST
திமுக நடத்தும் அனைத்து கட்சி கூட்டத்தினால் எந்த பயனும் ஏற்படாது...!! தமிழிசை பேட்டி

சுருக்கம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தும் வகையில் தமிழகத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டும்படி மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளர். அதற்காக அனைத்த கட்சிகளுக்கு கடிதமும் அனுப்பியுள்ளார்.

காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொள்வோம் என்று கூறி வருகிறது. ஆனால், தமிழக பாஜக, அதிமுக கட்சி அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ளப்போவதில்லை என கூறி வருகிறது.

இந்த நிலையில், திமுக நடத்தும் அனைத்து கட்சி கூட்டம் தேவையற்றது என தமிழக பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

கோவை சென்ற தமிழிசை, விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பேசினார். காவிரி விவகாரத்தில் திமுக அரசியல் லாபத்திற்காக அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது என்றார். அனைத்து கட்சி கூட்டத்தினால், தமிழக விவசாயிகளுக்கு எந்த பயனும் ஏற்படாது என்றும் கருத்து தெரிவித்தார். 

திமுக நடத்த உள்ள அனைத்து கட்சி கூட்டத்துக்கு தமிழக பாரதிய ஜனதா கட்சி பங்கேற்காது என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.

PREV
click me!

Recommended Stories

TN Politics: வன்னியரசு எனும் நான்.! யார் இந்த திருமாவின் படைத்தளபதி?!
TN Politics: தவெக அமைச்சரவையில் விசிக! அப்படியே யூ டர்ன் அடித்த திருமாவளவன்! சுக்குநூறாக உடைந்த திமுக கூட்டணி!