
மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தால் மட்டுமே காவிரி நதி நீர் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படும் என்றால், அந்த பதவியை நான் ராஜினாமா செய்கிறேன் என்று பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் சென்ற மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
காவிரி விவகாரம் இரு மாநிலத்திற்கு இடையேயான பிரச்சனை. அதில் மத்திய அரசு தன்னால் இயன்ற வரைதான் தலையிட முடியும்.
காவிரி விவகாரத்தில் என்னுடைய பதவியை ராஜினாமா செய்வதால், பிரச்சனை தீரும் என்றால் முதல் ஆளாக நான் ராஜினாமா செய்யத் தயார்.
பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கினால் மட்டும் போதாது. உரிய நீதியும் பெற்றுத்தர வேண்டும்.
முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து, தமிழக காங். தலைவர் திருநாவுக்கரசர் பேசி, அரசியல் ஆதாயம் தேடுகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.