நாம சாமி கும்பிட மாட்டோம்னு நினைக்கிறாங்க தலைவரே..! விநாயகர் சதுர்த்தியை கொண்டாட தயாராகும் திமுக..?

By karthikeyan VFirst Published Jul 2, 2020, 9:42 PM IST
Highlights

பகுத்தறிவு மற்றும் இறைமறுப்பு கொள்கைகளை அடிப்படையாக கொண்ட திமுக-வின் தலைவர் ஸ்டாலினிடம் திமுக நிர்வாகி ஒருவர், விநாயகர் சதுர்த்தியை கொண்டாட அனுமதி கேட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
 

பகுத்தறிவு மற்றும் இறைமறுப்பு கொள்கைகளை அடிப்படையாக கொண்ட திமுக-வின் தலைவர் ஸ்டாலினிடம் திமுக நிர்வாகி ஒருவர், விநாயகர் சதுர்த்தியை கொண்டாட அனுமதி கேட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

திராவிட முன்னேற்ற கழகம், இறைமறுப்பு, பகுத்தறிவு, சுயமரியாதை ஆகிய கொள்கைகளை கொண்ட கட்சி. உண்மையாகவே அந்த கட்சியின் தலைவர்களும், கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் இறைமறுப்பு மற்றும் பகுத்தறிவு கொள்கைகளை பின்பற்றுகிறார்களா என்றால், கண்டிப்பாக கிடையாது.

ஆனால் பொதுவெளியில் கட்சி கொள்கைகளின்படி நடந்துகொள்வது போல் காட்டிக்கொள்வார்கள் என்பதை சொல்லி தெரியவேண்டியதில்லை. 

இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலினிடம், திமுக நிர்வாகி ஒருவர், விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி கோரிய வீடியோ சமூக வலைதளங்களில் செம வைரலாகிவருகிறது. 

திமுக நிர்வாகி ஒருவர், ஸ்டாலினிடம் ஆன்லைன் உரையாடலில், வழக்கம்போல, தங்கள் கட்சி தலைவரை முடிந்தவரை பாராட்டி முடித்தபின்னர், கொரோனா நிவாரண பணிகளை பற்றியும் விளக்கினார். அதன்பின்னர், திராவிட விநாயகரை வழிபடவும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடவும் ஸ்டாலினிடம் அனுமதி கோரினார். 

விநாயகர் சதுர்த்திக்கு ஸ்டாலினிடம் அனுமதி கோரி பேசிய அந்த திமுக நிர்வாகி, விநாயகர் சதுர்த்தி என்பது ஆரியர்களின் விழா என்பது போலவும் விநாயகர் ஆர்.எஸ்.எஸ்க்கு சொந்தமான கடவுள் என்பதுபோலவும் ஆரியர்கள் நடந்துகொள்கிறார்கள். எனவே விநாயகர் சதுர்த்தியன்று நாங்கள் திராவிட விநாயகரை வழிபட நீங்கள் அனுமதியளிக்க வேண்டும். நாம் சாமி கும்பிட மாட்டோம் என்று நினைக்கின்றனர். அதனால், ஆரியர்களின் அரசியலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், விநாயகர் சதுர்த்தியன்று திராவிட விநாயகரை வழிபட அனுமதிக்க கோருகிறோம் என்றார் அந்த திமுக நிர்வாகி. 

அந்த திமுக நிர்வாகியின் கருத்தின்படி, விநாயகரை வைத்து அரசியல் செய்யும் ஆரியர்களின் அரசியலை எதிர்க்க, அதே விநாயகர் தான் தேவை என்பதை திமுக வெளிப்படையாக ஒப்புக்கொள்வதாக அமைந்துள்ளது.
 

click me!