திமுகவை தமிழ்நாட்ட விட்டே ஒழிச்சுக் கட்டணும் ! எச்.ராஜா ஆவேசம் !!

By Selvanayagam PFirst Published Apr 15, 2019, 7:56 AM IST
Highlights

திமுக  தமிழகத்தில் இனி தலையெடுத்து விடக்கூடாது என்பது தான், பாஜகவின் குறிக்கோள் என்றும் இதற்காகத்தான் . விட்டுக் கொடுக்கும் தன்மையுடன், தமிழகத்தில் குறைந்த தொகுதிகளை பெற்றுள்ளோம் எனவும் பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்..
 

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய  பாஜக தேசிய தலைவர் எச்,ராஜா, சிவகங்கை தொகுதியில் கடந்த 2014 தேர்தலில் அதிமுக., தனித்து போட்டியிட்டு, 4.76 லட்சம் ஓட்டுகள் பெற்றது. அதே தேர்தலில் நான், 1.34 லட்சம் ஓட்டுகள் பெற்றேன். இக்கூட்டணியின் ஓட்டு வங்கி, 6.10 லட்சம். எதிரணியில் உள்ள, தி.மு.க.,- - காங்., 3.70 லட்சம் ஓட்டுகள் பெற்றன. இதில், 2.40 லட்சம் ஓட்டுகள் வித்தியாசம் உள்ளது. எனவே சிவகங்கையில், பா.ஜ., வெற்றி உறுதி என தெரிவித்தார்.

பிரதமர் மோடி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பார்' என, அனைத்து கருத்து கணிப்புகளும் கூறுகின்றன. அதிகபட்சமாக, 310 இடங்கள் கிடைக்கும் என்றும் ராஜா தெரிவித்தார்.

ஸ்டாலின் மனநிலை, மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா  மறைவுக்கு பின், உடனே ஆட்சியை கைப்பற்றி, முதலமைச்சர் ஆகலாம் என ஸ்டாலின் நினைத்தார். ஆனால் அது நடக்கவில்லை. 

இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளில் வென்று, முதலமைச்சர்  ஆகலாம் என கனவு கண்டார். இந்த கனவை, அ.தி.மு.க.,- - பா.ஜ.,- - பா.ம.க., -- தே.மு.தி.க., கூட்டணி தகர்த்து விட்டது. 

அதிமுக  மெகா கூட்டணி அமைத்ததும், மூத்த அரசியல் தலைவர் என்றும் பாராமல், பாமக ராமதாசை தரக்குறைவாக திட்டினார். ஸ்டாலினுக்கு, அரசியல் தலைவருக்கான தகுதி கொஞ்சம் கூட இல்லை என ராஜா தெரிவித்தார்.

திமுக தமிழகத்தில் இனி தலையெடுத்து விடக்கூடாது என்பது தான், பா.ஜ.,வின் குறிக்கோள். விட்டுக் கொடுக்கும் தன்மையுடன், குறைந்த தொகுதிகளை பெற்றுள்ளோம். ஊழல், குடும்ப ஆட்சியை துாக்கி எறிய வேண்டும் என தெரிவித்த எச்.ராஜா தெரிவித்தார். அடுத்து திமுக என்ற கட்சியே தமிழகத்தில் இருந்து ஒழிக்கப்பட வேண்டும் என்றும் ராஜா கூறினார்.

click me!