ஆர்பாட்டத்தில் பிரேமலதாவுக்கு சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொடுத்த தேமுதிக தொண்டர்..!

By Thiraviaraj RMFirst Published Jul 5, 2021, 12:55 PM IST
Highlights

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பிரேமலதா சைக்கிளில் வந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டார்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பிரேமலதா சைக்கிளில் வந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டார்.

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை ஏற்றம் தொடர்பாக சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தேமுதிக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில், தேமுதிக பொருளாளர் பிரேமலதா உள்ளிட்டோர் கலந்துகொண்டு கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஆட்டோ மற்றும் டேக்ஸி ஓட்டுனர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. உலகிலேயே பெட்ரோல், டீசல்  அதிகமான விலைக்கு விற்பதில் இந்தியா தான் முதலிடம் வகிக்கிறது, இதை நாங்கள் கண்டிக்கிறோம்.

ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல், டீசலை கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்திய பிரேமலதா, தமிழ்நாடு முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவி வருகிறது. மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டுவதை கண்டிக்கிறோம். கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களை காக்க வேண்டியது மத்திய மாநில அரசின் கடமை, பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும், சிலிண்டர் விலை இந்த அளவுக்கு உயர்ந்தால் சாமானிய மக்கள் எவ்வாறு வாழ முடியும். மத்திய மாநில அரசுகள் இரும்பு கரம் கொண்டு இந்த விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டியது அரசின் கடமை.

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சைக்கிள் பேரணி pic.twitter.com/mTKRcYrr2k

— Velmurugan Paranjothy/ ப.வேல்முருகன் (@Vel_Vedha)


 
உலகத்திலேயே பெட்ரோல்,டீசல் விலை அதிகம் உள்ள நாடு இந்தியா தான். மக்களுக்கு வருமானம் இல்லாவிட்டாலும், அரசுக்கு வரி வந்து விட வேண்டும் என நினைக்கிறார்கள். பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வந்தால் பெட்ரோல் 44 ரூபாய்க்கும், டீசல் 42 ரூபாய்க்கு விற்க முடியும். அரசு லாபம் பெற வேண்டும் என வரியை மக்கள் மீது சுமத்த கூடாது.

 


 
கர்நாடகா அரசை தேமுதிக சார்பில் கண்டிப்பதாகவும், மேகதாதூவில் அணை கட்ட முடியாது என கூறினார். ஹைட்ரோ கார்பன் மற்றும் மீதேன் திட்டத்தை  தமிழகத்தில் தேமுதிக அனுமதிக்காது எனவும், தமிழகத்தை மின் மிகை மாநிலமாக மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனக் கூறினார். அவர் சைக்கிள் ஓட்டி வரும்போது தேமுதிக பிரமுகர் ஒருவர் சைக்கிளை பிடித்தபடி வந்தார். பிரேமலதாவுக்கு சைக்கிள் ஓட்டி பழக்கம் இல்லை என்பதால் அந்த நிர்வாகி சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொடுத்தாரோ என்னவோ..? 
 

click me!