உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டி... கேப்டன் விஜயகாந்த் அதிரடி சரவெடி அறிவிப்பு.

Published : Sep 15, 2021, 12:25 PM ISTUpdated : Sep 15, 2021, 12:29 PM IST
உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டி... கேப்டன் விஜயகாந்த் அதிரடி சரவெடி அறிவிப்பு.

சுருக்கம்

ஊரக உள்ளாட்சி தேர்தலில் கழகத்தின் சார்பில் போட்டியிட விருப்ப மனு அளிப்பதற்கு தேமுதிகவின் நிர்வாகிகளாக இருப்பவர்கள் அடிப்படை உறுப்பினர்களாக இருப்பவர்களும் தகுதியானவர்கள், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் 4 ஆயிரமும் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் 2000 உம் கட்டணம் செலுத்த வேண்டும் என அதில் அறிவிக்கப்பட்டுள்ளது

தமிழக உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் என தேமுதிக கட்சித் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார் ஏற்கனவே அதிமுக கூட்டணியிலிருந்து பாமக தனித்து கூட்டணி என்று அறிவித்துள்ள நிலையில் தற்போது தேமுதிகவும் அதே நிலைப்பாட்டை எடுத்துள்ளது இது குறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

 

தமிழகத்தில் நடைபெற இருக்கும் 2021- 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில்  தேசிய முற்போக்கு திராவிட கழகம் தனித்து போட்டியிடுகிறது, போட்டியிட விரும்புகின்ற அனைத்து நிர்வாகிகளும் கழகத் தொண்டர்களும் ஊரக உள்ளாட்சி தேர்தல் விருப்ப மனுக்களை 16-9-2021, 17-9-2021 ஆகிய 2 நாட்கள் காலை 10 மணியிலிருந்து அந்தந்த மாவட்ட கழக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுவை பெற்று பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை அந்தந்த மாவட்ட கழக தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். 

ஊரக உள்ளாட்சி தேர்தலில் கழகத்தின் சார்பில் போட்டியிட விருப்ப மனு அளிப்பதற்கு தேமுதிகவின் நிர்வாகிகளாக இருப்பவர்கள் அடிப்படை உறுப்பினர்களாக இருப்பவர்களும் தகுதியானவர்கள், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் 4 ஆயிரமும் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் 2000 கட்டணம் செலுத்த வேண்டும் என அதில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அதிமுக கூட்டணியிலிருந்து பாமக உள்ளாட்சி மன்றத் தேர்தலில் தனித்துப் போட்டி என அறிவித்துள்ள நிலையில் தற்போது தேமுதிகவும் தனித்து போட்டி என அறிவித்து இருப்பது அரசியல் களத்தை வெப்பமடையச் செய்துள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!