அனைத்து மொழியும் கற்போம்..ஆனால்..! இந்தியை ஏற்க முடியாது.. நச்னு பதில் சொன்ன விஜய்காந்த்..

Published : Apr 11, 2022, 03:05 PM IST
அனைத்து மொழியும் கற்போம்..ஆனால்..! இந்தியை ஏற்க முடியாது.. நச்னு பதில் சொன்ன விஜய்காந்த்..

சுருக்கம்

தாய்மொழியான தமிழ் மொழியை தவிர்த்து, ஆங்கிலத்துக்கு மாற்று மொழியாக இந்தியை ஒருபோதும் தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதே தேமுதிகவின் நிலைப்பாடு என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.  

தாய்மொழியான தமிழ் மொழியை தவிர்த்து, ஆங்கிலத்துக்கு மாற்று மொழியாக இந்தியை ஒருபோதும் தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதே தேமுதிகவின் நிலைப்பாடு என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றும் நேரம் வந்துவிட்டது. ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தி மொழியை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று  உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து கருத்து வெளியிட்டனர்.

இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில்,‘அன்னை மொழியை காப்போம், அனைத்து மொழிகளையும் கற்போம்’ என்பதே தேமுதிகவின் நிலைப்பாடு. தாய்மொழியான தமிழ் மொழியை தவிர்த்து, ஆங்கிலத்துக்கு மாற்று மொழியாக இந்தியை ஒருபோதும் தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதே தேமுதிகவின் நிலைப்பாடு என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

முன்னதாக டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழி குழுவின் 37வது கூட்டத்திற்கு தலைமை வகித்து பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாட்டின் ஆட்சி மொழியே அலுவல் மொழி என்று பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளதாக குறிப்பிட்டார். இந்தி மொழியின் முக்கியத்துவத்தை நிச்சயமாக இது அதிகரிக்க செய்யும். ஆங்கிலத்துக்கு மாற்று இந்தி மொழிதான் என்று தெரிவித்தார்.

அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது என்று வலியுறுத்தினார். பிற உள்ளூர் மொழிகளின் வார்த்தைகளை ஏற்று இந்தி மொழியை நெகிழ்வாக மாற்றாத வரையில், அது பரப்பப்படாது. மத்திய அமைச்சரவையின் 70 சதவீத நிகழ்ச்சி நிரல் இந்தியில் தயாரிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் 22,000-க்கும் மேற்பட்ட இந்தி ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்று கூறினார். 

9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்தி மொழியின் தொடக்க அறிவைக் கொடுக்க வேண்டியது அவசியம். இந்தி தேர்வுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தார். நாட்டின் குடிமக்கள் பேசும் மொழி ஒரே மொழியாக இருக்கும்போது அது இந்தியாவின் மொழியாக இருக்க வேண்டும். ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தி மொழியை ஏற்க வேண்டும் என்றும் வெவ்வேறு மொழிகளை பேசும் மாநில மக்கள், தொடர்பு வழியாக இந்தியாவின் மொழி இருக்க வேண்டும் எனவும் உள்துறை அமைச்சர் அமித்ஷா குறிப்பிட்டார். 

இந்த கருத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின், எம்.பி கனிமொழி, விசிக தலைவர் திருமாவளவன், பாமக நிறுவனர் ராமதாஸ், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தேசிய காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள் தங்களை கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

நேருக்கு நேர் வணக்கம் வைத்துக்கொண்ட அன்புமணி- ஜி.கே. மணி...! விரைவில் ஒன்று சேர வாய்ப்பு
ஒன்றியம்.. ஒன்றியம்னு சொல்லிட்டு..! இப்போ பாரத ரத்னா மட்டும் இனிக்குதா? வளர்மதி பயங்கர கேள்வி