
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் தேமுதிக நிர்வாகி இல்ல மண விழாவை நடத்தி வைக்க வருகை தந்தார் பிரேமலதா. செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ‘நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடுகிறது என்றும் அதிகார பலம், பண பலத்தை எதிர்த்து தேமுதிக களத்தில் இறங்கியுள்ளது.
விஜயகாந்திற்கும் தேமுதிக வேட்பாளர்களுக்கும் மக்கள் உரிய அங்கீகாரத்தை வழங்குவார்கள். ஆளும் கட்சியின் செயல்பாடுகளை பொறுத்தவரை, தேர்தலில் அளித்த எந்த வாக்குறுதியையும் இதுவரை நிறைவேற்றவில்லை.
பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் பணம் தராதது, பொங்கல் பரிசுத் தொகுப்புடன் பணம் கொடுக்காதது என மக்களிடம் மிகப் பெரிய மனக்குறை உள்ளது. நீட் அரசியல் மாநில அரசின் உரிமையை மத்திய அரசு பறிக்கிறது என்பது காலம் காலமாக குற்றஞ்சாட்டப்படும்.
நீட் தேர்வை நீக்குவோம் என்று கூறிவிட்டு ஆட்சிக்கு வந்த திமுக, இன்று அதைவைத்து அரசியல் செய்கிறது. வெற்றி வாய்ப்பு இதனிடையே தேமுதிக எத்தனை இடங்களில் வெல்லும் என நிருபர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, தேர்தல் முடிவன்று தான் இதற்கு விடை தெரியும் என்று கூறினார்.