மாதம் 1,000 எப்போ தருவீங்க..? பிரச்சாரத்தில் கேட்ட கேள்வியால் ‘அதிர்ச்சி’ அடைந்த உதயநிதி..அப்புறம் என்னாச்சு ?

Published : Feb 11, 2022, 01:52 PM IST
மாதம் 1,000 எப்போ தருவீங்க..? பிரச்சாரத்தில் கேட்ட கேள்வியால் ‘அதிர்ச்சி’ அடைந்த உதயநிதி..அப்புறம் என்னாச்சு ?

சுருக்கம்

கரூரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த உதயநிதி ஸ்டாலினிடம்,  ஆயிரம் ரூபாய் குடும்ப பெண்களுக்கு மாதந்தோறும் கொடுப்பேன் என்றீர்களே? எப்போது கொடுப்பீர்கள்? என்று கேட்டதற்கு,   இன்னும் நாலு வருஷம் இருக்கிறது.  அதற்குள் கொடுத்து விடுவோம் என்று சொல்ல,  ஆட்சி முடியும் போது கொடுக்கப் போகிறார்களா? என்று கேள்வி எழுப்பினர்.

உதயநிதி பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களில் எல்லாம் இந்த நெருக்கடி அவருக்கு ஏற்பட்டிருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது ஆட்சிக்கு வந்ததுமே முதல் கையெழுத்து நீட்டை ஒழிப்பதுதான். கரூர் பிரச்சாரத்தின்போது நீட்டுக்கு எதிராக தொடர்ந்து போராடுவது தான் அந்த ரகசியம் என்று சொல்ல,  இது மக்களை மேலும் எரிச்சல் பட வைத்திருக்கிறது .  

தஞ்சாவூர் மாவட்டத்தில் கல்லுகுளம் பகுதியில்,   மாநகராட்சியில் போட்டியிடும் 25 வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்போது, உதயநிதி ஸ்டாலினிடம் தங்கம்மாள் என்கிற பெண் தனக்கு நகை கடன் தள்ளுபடி செய்யவில்லை என்று புகார் கூற,   எப்போது தள்ளுபடி செய்வீர்கள் என்று கேட்க மனுவாக எழுதி கொடுக்கும்படி உதயநிதி மீண்டும் மீண்டும் அந்த பெண் கேள்வி எழுப்பினர். 

உடனே சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி அவர் பதில் ஏதும் சொல்ல முன்வராத தான் அதற்குள் மற்றொரு பெண் கவிதா நிதி உதவி வழங்கும்படி கோரிக்கை வைக்க , இப்படி அடுத்தடுத்த பெண்கள் ஒவ்வொரு கேள்வியாக எழுப்பி , அதற்கு மேல் பிரச்சாரத்தை தொடரமுடியாமல் போனது .

இதனால் அங்கு  பிரச்சாரத்தை நிறுத்திவிட்டு  அடுத்த இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றார்.   கேள்வி கேட்ட பெண்களை திமுகவினர் சூழ்ந்ததால்  பிரச்சார பகுதியில் பெரும் பதட்டம் நிலவியது. நேற்று கரூரில் பிரச்சாரத்தில் கேள்வி கேட்டு மக்கள் கொந்தளிக்க தஞ்சாவூரிலும் அப்படி ஒரு  சம்பவம் நடந்திருக்கிறது.    இதனால் உதயநிதிக்கு போகும் இடங்களில் எல்லாம் நெருக்கடி அதிகரித்திருக்கிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!