கட்சியை எப்படியாவது காப்பாத்துங்க கண்கலங்கிய கேப்டன்..!! கஷ்டப்பட்டு உருவாக்கியது என உருக்கம்..!!

By Ezhilarasan BabuFirst Published Nov 15, 2019, 12:18 PM IST
Highlights

.இதில் ஓரிரு நிமிடங்கள் மட்டுமே பேசி விட்டு தன் அறைக்கு சென்று உட்கார்ந்து விட்டார் விஜயகாந்த் என கூறப்படுகிறது. பின்னர்  கூட்டம் முடிந்ததும் ஒவ்வொரு மாவட்ட செயலாளர்களையும்  தன் அறைக்கு  அழைத்த விஜயகாந்த், அவர்களிடம்  மனம் திறந்து பேசி இருக்கிறார்.  அப்போது தான் கஷ்டப்பட்டு வளர்த்த கட்சி.  எப்படியாவது பாடுபட்டு உள்ளாட்சித் தேர்தலில் மட்டும் ஜெயித்து விடுங்கள்,  அப்பத்தான் கட்சிக்கு எதிர்காலம் இருக்கும்.  இல்லைனா எல்லாமே போய்விடும் என அவர் கண் கலங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

எதிர் வரும் உள்ளாட்சி தேர்தலில் மட்டும் எப்படியாவது ஜெயிச்சிடுங்க இல்லைன்னா கட்சியை காப்பாத்த முடியாது என மாவட்ட செயலாளர்களிடம் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண் கலங்கியாதாக தகவல் வெளியாகி உள்ளது. 

அதிமுக திமுக என இரண்டு கட்சிகளுக்கு மாற்றாக தேமுதிக என்ற கட்சியை ஆரம்பித்து மிக குறுகிய காலத்தில் எதிர்க்கட்சித்  தலைவராக உயர்ந்தவர் விஜயகாந்த் எம்ஜிஆருக்க அடுத்து  சினிமாத்துறையில் இருந்து வந்தது மக்களின் ஆதரவுடன் சட்டசபைக்கு சென்றவர்,  அதுவும் எதிர்க்கட்சி தலைவராக உயர்ந்தவர் விஜயகாந்த் மட்டும்தான், ஜெயலலிதா மற்றும் கருணாநிதிக்கு மாற்று சக்தியாக பார்க்கப்பட்ட விஜயகாந்த்,  தேர்தல் நேரத்தில்  தான் எடுத்த சில தவறான முடிவுகளின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மக்களின் நம்பிக்கை இழக்க நேரிட்டது.  அதிமுகவை கடுமையாக விமர்சித்து பெயரெடுத்த விஜயகாந்த் மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி வைத்தது.  விஜயகாந்த் மீதான நம்பிக்கை குறைய காரணமாக இருந்தது.  பிறகு கட்சி  உறுப்பினர்கள் தேமுதிகவை புறக்கணித்துவிட்டு அதிமுக,  திமுகவை போன்ற கட்சிகளுக்கு தாவியது, விஜயகாந்தால் திறம்பட கட்சியை நடத்த முடியவில்லை என்ற கருத்தை உருவாக்கியது. 

திமுகவை வாரிசு அரசியல் கட்சி என விமர்சித்த விஜயகாந்த்,  தன்னுடைய குடும்ப உறுப்பினர்களுக்கு கட்சியில் முக்கிய பதவிகளை கொடுத்தது அதே வாரிசு அரசியலில் ஈடுபட்டது விஜயகாந்த் மீது கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்தியது.   மனைவி பிரேமலதா தேமுதிகவில் நிழல் அரசியல் செய்தது கட்சிக்குள்ளேயே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.  இதனையடுத்து விஜயகாந்த்துக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு உள்ளிட்டவை காரணமாக கடும் நெருக்கடிகளை சந்தித்த தேமுதிக ஒரு பெயரளவுக்கு கட்சி என்ற நிலைக்கு தள்ளப்பட்டது.  தேமுதிக சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் படுதோல்வி, மற்றும்  வீரியமிக்க தலைமை இல்லாத நிலை என ஒரு கட்டத்தில்  கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாகிவிட்டது தேமுதிகவின் கதை.  இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது நிலையில்  அதை சந்திக்க தேமுதிக தயாராகி வருகிறது.  இந்நிலையில் . 

கட்சியின் எதிர்காலம் பற்றிய தேமுதிக தலைவர் விஜயகாந்த் பெரும் சோகத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  சென்னை கோயம்பேடு தேமுதிக அளவில்  கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.  இதில் ஓரிரு நிமிடங்கள் மட்டுமே பேசி விட்டு தன் அறைக்கு சென்று உட்கார்ந்து விட்டார் விஜயகாந்த் என கூறப்படுகிறது. பின்னர்  கூட்டம் முடிந்ததும் ஒவ்வொரு மாவட்ட செயலாளர்களையும்  தன் அறைக்கு  அழைத்த விஜயகாந்த், அவர்களிடம்  மனம் திறந்து பேசி இருக்கிறார்.  அப்போது தான் கஷ்டப்பட்டு வளர்த்த கட்சி.  எப்படியாவது பாடுபட்டு உள்ளாட்சித் தேர்தலில் மட்டும் ஜெயித்து விடுங்கள்,  அப்பத்தான் கட்சிக்கு எதிர்காலம் இருக்கும்.  இல்லைனா எல்லாமே போய்விடும் என அவர் கண் கலங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.
 

click me!