உள்ளாட்சித் தேர்தலை எப்படி வேண்டுமானாலும் நடத்துங்க... வெற்றி திமுகவுக்குதான்... சொல்றது யாரு தெரியுமா?

By Asianet TamilFirst Published Nov 15, 2019, 10:35 AM IST
Highlights

எங்களுக்குக் கிடைத்த தகவலின்படி உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறா வாய்ப்புள்ள பகுதிகள், வாய்ப்பு இல்லாத பகுதிகளைப் பிரித்து  2, 3 கட்டங்களாக தேர்தல் நடத்த ஆளுங்கட்சி உத்தேசித்துள்ளாக தெரிகிறது. இதனால் திமுக பயந்துவிடாது. 1986-ல் எம்.ஜி.ஆர். இந்திரா காந்தியோடு கூட்டணி அமைத்திருந்தார். அந்தக் காலத்திலேயே உள்ளாட்சித் தேர்தலில் திமுக பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றது.
 

உள்ளாட்சித் தேர்தலை எப்படி நடத்தினாலும் திமுகவே வெற்றி பெறும் என்று முன்னாள் அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புவர்களிடம் திமுக விருப்ப மனுக்களை பெற்றுவருகிறது. திருச்சியில் மாவட்ட கட்சி அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டுவருகின்றன. இந்நிலையில் திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளாரும் முன்னாள் அமைச்சருமான கே.என். நேரு செய்தியாளர்களிடம் பேசினார்.

   
 “எங்களுக்குக் கிடைத்த தகவலின்படி உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறா வாய்ப்புள்ள பகுதிகள், வாய்ப்பு இல்லாத பகுதிகளைப் பிரித்து  2, 3 கட்டங்களாக தேர்தல் நடத்த ஆளுங்கட்சி உத்தேசித்துள்ளாக தெரிகிறது. இதனால் திமுக பயந்துவிடாது. 1986-ல் எம்.ஜி.ஆர். இந்திரா காந்தியோடு கூட்டணி அமைத்திருந்தார். அந்தக் காலத்திலேயே உள்ளாட்சித் தேர்தலில் திமுக பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றது.
உள்ளாட்சித் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், ஆளுங்கட்சியினர் முன்கூட்டியே நலத்திட்ட உதவிகளை வழங்கிவருகிறார்கள். ஆட்சி, அதிகாரம் தங்கள் கையில் இருப்பதால் இவ்வாறு செய்கிறார்கள். அவர்கள் எது செய்தாலும் திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றிபெறும். திமுகவில் எந்தத் தொய்வும் எப்போதும் கிடையாது. திமுகவினர் வழக்கம்போல உற்சாகமாக இருக்கிறார்கள். உள்ளாட்சித் தேர்தலில் திமுக மாபெரும் வெற்றியை பெறும்.” என்று கே.என். நேரு  தெரிவித்தார்.

click me!