கால்நடைகளுக்காக கதறிய கேப்டன் விஜயகாந்த்..!! இதயம் உள்ள ஒவ்வொருவரையும் நெகிழவைத்தார்..!!

Published : Apr 16, 2020, 05:20 PM ISTUpdated : Apr 16, 2020, 09:19 PM IST
கால்நடைகளுக்காக கதறிய கேப்டன் விஜயகாந்த்..!!  இதயம் உள்ள ஒவ்வொருவரையும் நெகிழவைத்தார்..!!

சுருக்கம்

எனவே தமிழகம் முழுவதும் உள்ள அரசு கால்நடை மருத்துவமனைகளில் கால்நடைகளுக்கு உரிய சிகிச்சை அளித்து அவற்றைப் பாதுகாக்க வேண்டியது நமது கடமை என கேப்டன் விஜயகாந்த் தெரிவித்துள்ளார் .  

கால்நடைகளுக்கும் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதால் அவைகளையும் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார் வௌவால் மூலமாக கொரோனா வைரஸ் பரவ வாய்ப்பு உள்ளது  என்பதை மேற்கோள் காட்டியுள்ள விஜயகாந்த் , கால்நடைகளுக்கு பாதுகாப்பு வழங்க தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார் . கொரோனா  வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது , இதுவரையில் இந்தியாவில் 12,456 பேருக்கு கொரோனா தொற்று  ஏற்பட்டுள்ளது , சுமார் 423 பேர் உயிரிழந்துள்ளனர் . 1513 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் ,  இந்தியாவிலேயே மகாராஷ்டிர மாநிலம் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது ,  அங்க 3 ஆயிரத்து 81 பேருக்கு ஒரு  வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது .  டெல்லியில்  1578 பேருக்கும் ,  தமிழகத்தில்  1242  பேருக்கும் கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது . 



ராஜஸ்தான் ,  மத்திய பிரதேசம் , உத்தரப் பிரதேசம் ,  குஜராத் ,  உள்ளிட்ட மாநிலங்கள் அடுத்தடுத்த நிலையில் உள்ளன .  இந்நிலையில் தமிழகத்தில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது .  இதுவரையில்  தமிழகத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் இந்த வைரஸ் சமூகப் பரவலாக மாறுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது .  இதனால்   லட்சக்கணக்கான மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து வீடுகளில் தவித்து வருகின்றனர் ,  சாலைகள் தெருக்கள் என  நாடே வெறிச்சோடி காணப்படுகிறது .   மக்களைச் சார்ந்து வாழ்ந்து வரும் ஆடு ,  மாடு ,  கோழி ,  நாய் ,  பூனை உள்ளிட்ட கால்நடைகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன.  நாய் உள்ளிட்ட விலங்குகள்  குடிக்க தண்ணீர்கூட கிடைக்காமல் உயிருக்கு போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன . இந்த துயர நிலை குறித்து தனது ஆதங்கத்தை வெளிபடுத்தியுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் ,  தமிழக அரசுக்கு கோரிக்கை ஒன்று வைத்துள்ளார் அதில்,  கொரோனா வைரசிலிருந்து  தமிழக மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவது போல் ,  நம்மை சார்ந்துள்ள ஆடு ,  மாடு , கோழி ,  நாய் ,  பூனை போன்ற பல்வேறு கால்நடைகளுக்கும் பறவைகளுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் . 

 

தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில்  கொரோனா வைரஸ் காரணமாக பல கால்நடைகள் உணவு மற்றும்  குடிக்க தண்ணீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றன. மேலும் கால்நடைகளுக்கு கொரோனா பரவும் அபாயம் உள்ளது ,  வௌவால்கள் மூலம் கொரோனா பரவ ஏராளமான வாய்ப்புகள் உள்ளதாக அண்மையில் வெளியான புள்ளி விவரங்கள்  தெரிவிக்கின்றன .  எனவே தமிழகம் முழுவதும் உள்ள அரசு கால்நடை மருத்துவமனைகளில் கால்நடைகளுக்கு உரிய சிகிச்சை அளித்து அவற்றைப் பாதுகாக்க வேண்டியது நமது கடமை என கேப்டன் விஜயகாந்த் தெரிவித்துள்ளார் .  கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  சிகிச்சை அளிக்க தனது கல்லூரியை பயன்படுத்திக் கொள்ளலாம் என மக்களுக்காக கல்லூரியை வழங்கியுள்ள நிலையில் ,  தற்போது உணவு குடிநீர் இன்றி தவித்து வரும் கால்நடைகளின் மீது விஜயகாந்த் கரிசனம் காட்டியிருப்பது ,  அவரது தொண்டர்களை  மட்டுமல்ல மாந்தநேயம் உள்ள அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

நான் கூட்டணியில் இருந்து வெளியேற அண்ணாமலை தான் காரணம்..? டிடிவி தினகரன் பரபரப்பு விளக்கம்
விஜயை வைத்து பூச்சாண்டி..! வெறுப்பின் உச்சத்தில் ஸ்டாலின்..! காங்கிரஸை கழற்றிவிட திமுக அதிரடி முடிவு..!