ஆர்ட்ஸ்&சயின்ஸ், என்ஜினியரிங் கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் எப்போது..? தெளிவுபடுத்திய உயர்கல்வித்துறை

By karthikeyan VFirst Published Apr 16, 2020, 4:13 PM IST
Highlights

கொரோனா ஊரடங்கால் அனைத்து விதமான செயல்பாடுகளும் முடங்கியுள்ள நிலையில் கலை - அறிவியல், பொறியியல் கல்லூரிகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் குறித்து உயர்கல்வித்துறை சார்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. 
 

கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டிருப்பதால், கொரோனாவை கட்டுப்படுத்த மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிந்துவிட்ட நிலையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, பின்னர் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவித்து ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

10வது பொதுத்தேர்வு குறித்து பள்ளிக்கல்வித்துறை தெளிவுபடுத்தியிருந்த நிலையில், கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் குறித்து உயர்கல்வித்துறை தற்போது தெளிவுபடுத்தியிருக்கிறது. 


கலை - அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் என அனைத்து கல்லூரிகளுக்கான செமஸ்டர் தேர்வுகளும் அடுத்த கல்வியாண்டின் தொடக்கத்தில் நடத்தப்படும் என உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

கல்வியாண்டு ஜூன் மாதம் தொடங்கும். எனவே அந்த வகையில், கல்வியாண்டின் தொடக்கத்தில் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட்டு, அதன்பின்னர் அடுத்த ஆண்டுக்கான பாடங்கள் நடத்தப்படுவது தொடங்கப்படும் என்று உயர்கல்வித்துறை தெளிவுபடுத்தியுள்ளது. அதனால் செமஸ்டர் தேர்வுக்கான தயாரிப்புக்கு இந்த விடுமுறைகளை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். 
 

click me!