தேவையான எல்லாம் எங்ககிட்ட இருக்கு.... பட்டியலை வாசித்து காட்டி ஸ்டாலினை திணறடித்த எடப்பாடியார்...!

By Kanimozhi PannerselvamFirst Published Apr 16, 2020, 3:25 PM IST
Highlights

சில எதிர்கட்சி தலைவர்கள் இப்போது தான் வெண்டிலேட்டர், மாஸ்க், பிசிஆர் கருவிகளை வாங்க உத்தரவிடுகிறார்கள் என்று தவறான கருத்துக்களை பரப்பி வருகின்றனர். 
இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் நிவாரண பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களிடம் முதலமைச்சர் கேட்டறிந்தார். 


அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தற்போதைய சூழலில் கொரோனா தடுப்பு பணியே முக்கியம் என்றும், அதற்கு தான் முன்னுரிமை கொடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார். கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்வதற்காக 530 மருத்துவர்கள், 1000 செவிலியர்கள், 1500 ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்களை நியமித்துள்ளதை சுட்டிக்காட்டினார். 



சில எதிர்கட்சி தலைவர்கள் இப்போது தான் வெண்டிலேட்டர், மாஸ்க், பிசிஆர் கருவிகளை வாங்க உத்தரவிடுகிறார்கள் என்று தவறான கருத்துக்களை பரப்பி வருகின்றனர். ஏற்கனவே அரசிடம் போதுமான அளவு மருத்துவ உபகரணங்கள் கையிருப்பு வைக்கப்பட்டுள்ளன.  கொரோனா நோயின் பரவ தொடங்கியதுமே தேவையான மருத்துவ உபகரணங்கள் வாங்கி கையிருப்பு வைக்கப்பட்டன என்று தெரிவித்த முதலமைச்சர் பழனிசாமி அவர்கள், கையிருப்பில் உள்ள மருத்துவ உபகரணங்களை பட்டியலை வாசித்தார். 


தமிழகத்தில் அரசிடம் 2,501 வென்டிலேட்டர்களும், 870 வென்டிலேட்டர்களும் தனியாரிடமும் ஆக மொத்தம் 3,371 வென்டிலேட்டர்கள் கையிருப்பு உள்ளன. முன்றடுக்கு முகக்கவசங்கள் 65 லட்சமும், எண் 95 முகக்கவசங்கள் 3 லட்சமும், முழு உடல் பாதுகாப்பு உடை 2 லட்சமும் கையிருப்பு உள்ளது. ஒரு லட்சத்து 95 ஆயிரம் பிசிஆர் கிட்கள் கையிருப்பு இருப்பதாகவும், 68 ஆயிரம் பிசிஆர் கிட் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 


வளர்ந்த நாடுகளில் ஏற்பட்டது போன்ற நோயின் தீவிரம் அதிகரித்தால் மருத்துவ உபகரணங்களின் தேவை அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் குழு பரிந்துரைத்ததன் அடிப்படையிலேயே புதிய ஆர்டர்கள் கொடுக்கப்பட்டிருப்பதாக முதலமைச்சர் பழனிசாமி தெளிவுபடுத்தினார். மேலும் இந்தியாவிலேயே தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து உபகரணங்களையும் வாங்கி கையிருப்பு வைத்திருப்பதாக திட்டவட்டமாக தெரிவித்தார். 
 
click me!