அரசியலில் இதெல்லாம் சகஜம்.. தோல்வியைக் கண்டு துவண்டு போகும் கட்சி தேமுதிக அல்ல.. அசராத பிரேமலதா ..!

By vinoth kumarFirst Published Jul 1, 2021, 3:36 PM IST
Highlights

அரசியலில் வெற்றி தோல்வி என்பது சகஜம், தேமுதிகவை பொறுத்தவரையில் வெற்றியைக் கண்டு ஆணவப்படுவதோ, தோல்வியைக் கண்டு துவண்டு போகும் கட்சி அல்ல. வலுவான கட்டமைப்புகளை உள்ளடக்கிய வலுவான கட்சி தேமுதிக. 

அரசியலில் வெற்றி தோல்வி என்பது சகஜம், தேமுதிகவை பொறுத்தவரையில் வெற்றியைக் கண்டு ஆணவப்படுவதோ, தோல்வியைக் கண்டு துவண்டு போகும் கட்சி அல்ல என அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா கூறியுள்ளார்.

மறைந்த தேமுதிக நிர்வாகிகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் பிரேமலதா விஜயகாந்த் மதுரை வந்தார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த விலைவாசி உயர்வு பொதுமக்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாகியுள்ளது. இதுதொடர்பாக அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. விலைவாசி உயர்வைக் கண்டித்து தேமுதிக சார்பில் வரும் 5ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு உள்ளது.

அரசியலில் வெற்றி தோல்வி என்பது சகஜம், தேமுதிகவை பொறுத்தவரையில் வெற்றியைக் கண்டு ஆணவப்படுவதோ, தோல்வியைக் கண்டு துவண்டு போகும் கட்சி அல்ல. வலுவான கட்டமைப்புகளை உள்ளடக்கிய வலுவான கட்சி தேமுதிக. கட்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வதற்கு நிறைய பணிகளை செய்து கொண்டிருக்கிறோம். எங்களது திருமணம் கருணாநிதி தலைமையில் நடந்தது இந்த உலகத்துக்கே தெரியும். கருணாநிதி மற்றும் ஸ்டாலின் மீது விஜயகாந்திற்கு என்றைக்குமே நட்புறவு இருக்கும் என்றார்.

சசிகலா அதிமுக நிர்வாகிகளுடன் தொலைபேசியில் பேசுவது அக்கட்சியின் தனிப்பட்ட விஷயம், அதுபற்றி நான் கருத்து சொல்ல முடியாது. உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி தொடருமா என்று கேட்டதற்கு, முதலில் உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவித்த பின்னர் ஆலோசனை கூட்டம் கூட்டி தலைமை அறிவிக்கும் எனக் கூறினார்.

click me!