இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் 'தேமுதிக..' தலைமைக்கு அதிர்ச்சி கொடுத்த நிர்வாகிகள் !!

By Raghupati RFirst Published Feb 9, 2022, 12:25 PM IST
Highlights

சேலம் மாவட்டத்தில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார் தேமுதிக வேட்பாளர். இந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. 12 ஆயிரத்து 838 பதவியிடங்களுக்கு இந்த தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.  அதன்படி, கடந்த மாதம் 28-ந்தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் 4-ந்தேதி நிறைவடைந்தது. மொத்தம் 74,383 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

கடந்த 5-ந்தேதி வேட்புமனு பரிசீலனை நடந்தது. இதில் 2,062 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. நேற்று முன்தினம் வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாள் என அறிவிக்கப்பட்டது. 14,324 பேர் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றுக்கொண்டனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் ருசிகர சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. 

இதில் திமுக 15 வார்டுகளிலும், அதிமுக  14 வார்டுகளிலும், பாமக, அ மமுக 3 வார்டுகளிலும் போட்டியிடுகின்றன. மேலும் 5-வது வார்டில் பாஜக வேட்பாளர் சின்னுராஜ் போட்டியிடுகிறார். இந்த வார்டில் அதிமுகவினர் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. இதனால் பாஜக - திமுக இடையே நேரடி மோதல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே 10ஆவது வார்டில் தேமுதிக நகர செயலாளர் ஈஸ்வரன் மனைவி அருணாராணி போட்டியிடுகிறார். இவர் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். 

இந்த வார்டில் அதிமுக வேட்பாளர் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. இந்த வார்டில் தற்போது  திமுக - தேமுதிக இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. தமிழக அளவில் பாஜக, தேமுதிகவுடன் கூட்டணி இல்லை என்றாலும் பனமரத்துபட்டியில் 2 வார்டுகளில் அதிமுக அந்த கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

click me!