தேமுதிக போனால் போகட்டும்... எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை... அசராத முதல்வர் எடப்பாடியார்..!

By vinoth kumarFirst Published Mar 13, 2021, 3:07 PM IST
Highlights

கூட்டணியை விட்டு தேமுதிக சென்றதால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை. கட்சிகளுக்கு இருக்கும் வாக்கு சதவிகிதத்தின்படி தொகுதிகள் ஒதுக்கப்படுகிறது. கூட்டணி விவகாரத்தில் தேமுதிக பக்குவத்துடன் செயல்படவில்லை.

அதிமுக வேட்பாளர்களுக்கு சில இடங்களில் ஏற்பட்டுள்ள பிரச்சனை சரி செய்யப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

சேலம் மாவட்டம் ஓமலூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி;-  கூட்டணியை விட்டு தேமுதிக சென்றதால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை. கட்சிகளுக்கு இருக்கும் வாக்கு சதவிகிதத்தின்படி தொகுதிகள் ஒதுக்கப்படுகிறது. கூட்டணி விவகாரத்தில் தேமுதிக பக்குவத்துடன் செயல்படவில்லை. புதிய தமிழகம் கட்சி அதிமுக கூட்டணியில் இருந்து ஏற்கனவே வெளியேறிவிட்டது. 

அதிமுக வேட்பாளர்களுக்கு சில இடங்களில் ஏற்பட்டுள்ள பிரச்சனை சரி செய்யப்படும். வேட்பாளர் பட்டியல் தொடர்பான அதிருப்தி என்பது எல்லா கட்சிகளிலும் தீர்க்க வேண்டும். கூட்டணியில் ஒரே தொகுதியை எல்லா கட்சிகளும் கேட்கும்போது பேசித்தான் தீர்க்க வேண்டும். புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்று வருகிறது. புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவடைந்த பின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும். கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்றோம். 

மேலும், திமுக தேர்தல் அறிக்கையை வெளியிடுவதற்கு முன்னரே, நாங்கள் ஆட்சியில் இருக்கும் போது பல்வேறு அறிவிப்புகள் வெளியிட்டு செயல்படுத்தி உள்ளோம். அது மக்களுக்கு தெரியும். இதனால்,திமுக தேர்தல் அறிக்கை பெரிய விஷயமல்ல. பெரும்பான்மை பலத்துடன் நாங்கள் தான் வெற்றி பெறுவோம். நீட் தேர்வு தமிழகத்தில் இருக்ககூடாது என்பதுதான் அதிமுகவின் நிலைப்பாடு எனவும் முதல்வர் கருத்து தெரிவித்துள்ளார். 

click me!