பாமகவை விட, எக்ஸ்ட்ராவா ஒன்னு வேணும்!! இரண்டு தரப்பிடமும் வைக்கப்பட்ட ஒரு முக்கிய கோரிக்கை... தொடரும் இழுபறி

By sathish kFirst Published Mar 2, 2019, 10:25 AM IST
Highlights

பா.ம.க.வை விட ஒரு தொகுதி அதிகமாக கொடுத்தால் மட்டுமே கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடியும் என அதிமுகவிடம் தேமுதிக கறாராக கூறியதால் பேச்சு தொடந்து கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் திமுக தரப்பில் 5 தொகுதிகள் வரை  கொடுப்பதாக ரகசிய பேச்சு வார்த்தையில் நடந்த டீலில் ஏற்பட்ட இழுபறியால் இன்னும் கூட்டணி முடிவாகாமல் இருக்கிறது.

பா.ம.க.வை விட ஒரு தொகுதி அதிகமாக கொடுத்தால் மட்டுமே கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடியும் என அதிமுகவிடம் தேமுதிக கறாராக கூறியதால் பேச்சு தொடந்து கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் திமுக தரப்பில் 5 தொகுதிகள் வரை  கொடுப்பதாக ரகசிய பேச்சு வார்த்தையில் நடந்த டீலில் ஏற்பட்ட இழுபறியால் இன்னும் கூட்டணி முடிவாகாமல் இருக்கிறது.

நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு இரு அணிகளும் தயார் நிலையில் உள்ள இந்த நேரத்தில், தேமுதிக மட்டும் கூட்டணி பற்றிய எந்த அறிவிப்பும் வெளியிடாமல் மவுனம் காத்து வருகிறது. தே.மு.தி.க.,வை கூட்டணிக்கு இழுக்க, அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., தரப்பில் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தப்படுகிறது. அதிமுக தரப்பில், குறைந்த தொகுதிகள் வழங்க முடிவு செய்யப்பட்டது. இதை, தேமுதிக விரும்பவில்லை.

ஆனால், தேமுதிகவை  விடவும் மனசில்லாமல் தவிக்கிறது. கட்டாயம் இணைத்தே ஆகவேண்டும் என நினைக்கிறது பிஜேபி. எனவே, தேமுதிகவிடம், அதிமுக தரப்பில் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. பாமகவை விட, ஒரு தொகுதி எக்ஸ்ட்ராவாக கொடுத்தால் மட்டுமே, கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடியும் என தேமுதிக தரப்பில் கறாராக சொல்லப்பட்டதாம்.

இதேபோல, திமுக தரப்பிலும், தேமுதிகவிடம் பேசப்படுகிறது. 5 லோக்சபா தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா எம்பி. பதவியை வழங்க, திமுக, முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. இரண்டு தரப்பிடமும், ஏதோ முக்கிய கோரிக்கையை, தேமுதிக முன்வைத்ததாக கூறப்படுகிறது. அதுவே, கூட்டணி இழுபறிக்கு முக்கிய காரணம் என தேமுதிகவினர் மத்தியில் சொல்லப்படுகிறது.

இது குறித்து, இரண்டு தரப்பிலும், தேமுதிக தலைமை ரகசிய பேச்சு நடத்தி வருகிறது.நேற்று, தேமுதிகவினர், கட்சி தலைமை அலுவலகத்திற்கு விருப்ப மனு வாங்க வந்திருந்தனர். அங்கிருந்த, மாநில துணை செயலர், சுதீஷிடம், கூட்டணி குறித்து, தங்கள் எண்ணத்தை வெளிப்படுத்தினர். அதற்கு அவர், 'வெற்றி கூட்டணியில் இடம்பெற வேண்டும் என, விஜயகாந்த் ஆலோசனை வழங்கியுள்ளார். எனவே, சரியான கூட்டணியை முடிவு செய்வதற்கு, இன்னும் சில நாட்கள் ஆகலாம்' என, கூறியுள்ளார்.

click me!