அதிமுக – தேமுதிக கூட்டணி இன்று அறிவிக்கப்படுகிறது !! 5 மக்களவைத் தொகுதி மற்றும் 1 மாநிலங்களவை தொகுதிக்கு ஒப்பந்தம்…

By Selvanayagam PFirst Published Mar 2, 2019, 8:26 AM IST
Highlights

அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைவது  தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்த தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு இந்த முடிவெடுக்கப்பட்டதாக தெரிகிறது.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தே.மு.தி.க.,வை கூட்டணிக்கு இழுக்க, அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., தரப்பில் பேச்சு நடத்தப்பட்டு வந்தது. தொடர்ந்து இரண்டு வாரங்களாக இழுபறியில் இருந்து வந்த இந்த பேச்சு வார்த்தை நேற்று ஒரு முடிவுக்கு வந்ததாக தெரிகிறது.

முன்னதாக அ.தி.மு.க., தரப்பில், குறைந்த தொகுதிகள் வழங்க முடிவு செய்யப்பட்டது. இதை, தே.மு.தி.க., விரும்பவில்லை. ஆனால், தே.மு.தி.க.,வை கட்டாயம் இணைக்க வேண்டும் என்பதில், பா.ஜ., உறுதியாக இருந்தது.  எனவே, தே.மு.தி.க.,விடம், அ.தி.மு.க., தரப்பில் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. 'பா.ம.க.,வை விட, ஒரு தொகுதி கூடுதலாக வழங்கினால் மட்டுமே, கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடியும்' என, தே.மு.தி.க., கறாராக கூறி வருகிறது.

இதேபோல, தி.மு.க., தரப்பிலும், தே.மு.தி.க.,விடம் பேசப்பட்டது. ஆனால் . ஐந்து லோக்சபா தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா எம்.பி., பதவியை வழங்க, தி.மு.க., முன்வந்துள்ளதாக கூறப்பட்டது.

இரண்டு தரப்பிடமும், ஏதோ முக்கிய கோரிக்கையை, தே.மு.தி.க., முன்வைத்ததாக கூறப்படுகிறது. அதுவே, கூட்டணி இழுபறிக்கு, பிரதான காரணமாக கூறப்பட்டது..

இந்நிலையில் நேற்று, தே.மு.தி.க.,வினர், கட்சி தலைமை அலுவலகத்திற்கு விருப்ப மனு வாங்க வந்திருந்தனர். அங்கிருந்த, மாநில துணை செயலர், சுதீஷிடம், கூட்டணி குறித்து, தங்கள் எண்ணத்தை வெளிப்படுத்தினர்.

மேலும் தேமுதிக அலுவலகம் வந்திருந்த 'விஜயகாந்த் வெற்றி கூட்டணியில் இடம்பெற வேண்டும் என, ஆலோசனை வழங்கியுள்ளார். அதன்படி அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்வது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து இன்று அதிமுக – தேமுதிக கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு செளியிடப்படம் என எதிர்பார்க்கப்படுகிறது.

click me!