அதிமுகவில் அதிரடி மாற்றம் !! மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து தூக்கி எறியப்பட்டார் உடுமலை ராதாகிருஷ்ணன் !!

By Selvanayagam PFirst Published Mar 1, 2019, 10:53 PM IST
Highlights

தமிழகத்தில் பல மாவட்டங்களில் அதிமுக மாவட்டச் செயலாளர்களை அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர்.  திருப்பூர் வடக்கு மாவட்டச் செயலாளர் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், நீலகிரி மாவட்டச் செயலாளர் எம்.பி.அர்ஜூனன் எம்.பி. ஆகியோர் தூக்கி எறியப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் சூழலில் அதிமுக மாவட்ட நிர்வாகிகளில் அதிரடி மாற்றங்களை அதிமுக தலைமை செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் கூட்டாக அறிவித்துள்ளனர்.

ஒன்றுப்பட்ட தூத்துக்குடி மாவட்டச்செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் நீக்கப்பட்டு மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி வடக்கு மாவட்டம், தூத்துக்குடி தெற்கு மாவட்டம் என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாவட்டச்செயலாளராக அமைச்சர் கடம்பூர் ராஜு நியமிக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளராக முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேபோன்று  நீலகிரி மாவட்டச் செயலாளர் எம்.பி.அர்ஜூனன் நீக்கப்பட்டு மாவட்டச் செயலாளராக முன்னாள் அமைச்சர் புத்திச்சந்திரன்  நியமிக்கப்பட்டுள்ளார்.

திருப்பூர் வடக்கு மாவட்டச்செயலாளர் பொறுப்பில் இருக்கும் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நீக்கப்பட்டு, சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் மாவட்டச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதே நேரத்தில் அதிமுக அமைப்புச் செயலாளர்களாக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.பி.அர்ஜுனன், சி.த.செல்லப்பாண்டியன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

click me!