அரசியல் ஆதாயத்திற்காக தீவிரவாதிகளை ஆதரிப்பதா..? இதயத்தை உலுக்கி எடுத்த மோடியின் பேச்சு

By Thiraviaraj RMFirst Published Mar 1, 2019, 6:08 PM IST
Highlights

மோடி வரலாம், போகலாம். ஆனால், நாடு நிரந்தரமானது. உங்கள் அரசியல் ஆதாயத்திற்காக, நாட்டை பலவீனப்படுத்தாதீர்கள்’ என பிரதமர் மோடி உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மோடி வரலாம், போகலாம். ஆனால், நாடு நிரந்தரமானது. உங்கள் அரசியல் ஆதாயத்திற்காக, நாட்டை பலவீனப்படுத்தாதீர்கள்’ என பிரதமர் மோடி உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குமரியில் பல்வேறு வளர்ச்சி பணிகளை துவக்கி வைத்த பிரதமர் மோடி பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அப்போது பேசிய அவர், ‘’ இதற்கு முந்தைய ஆட்சியில், நாட்டின் பல்வேறு பகுதிகளில், பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில், அப்பாவி பொதுமக்கள் பலர் பாதிக்கப்பட்டனர். அப்போதெல்லாம், பயங்கரவாதிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால், தற்போதுள்ள அரசு பயங்கரவாதத்தை வேடிக்கை பார்க்க விரும்பவில்லை. உரி தாக்குதல் சம்பவத்தின் போது, நம் வீரர்கள் என்ன செய்தார்கள் என்பதை இந்த தேசம் பார்த்தது. புல்வாமா தாக்குதல் சம்பவத்தை அடுத்து, நம் ராணுவம் என்ன செய்தது என்பதை நாடே அறியும். 

துணிச்சல் மிக்க ராணுவத்தினருக்கு என் வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களால் தான் நாம் பாதுகாப்பாக இருக்கிறோம். 26/11 தாக்குதல் சம்பவத்திற்குப் பின் பயங்கரவாதிகளுக்கு எதிராக, சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்த வேண்டும் என மக்கள் நினைத்தனர். ஆனால், அப்போதைய காங்., அரசு அதை அனுமதிக்கவில்லை. இப்போது என்ன நடந்திருக்கிறது. நம் ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. 

இதன் மூலம் பயங்கரவாதிகள் ஒடுக்கப்படுவர். இது தான் நவீன இந்தியா. பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு வட்டியும் முதலுமாக பதிலடி கொடுக்கப்படும். ஒவ்வொரு இந்தியருக்கும் என் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தேச நலனில் அக்கறை செலுத்தி நடவடிக்கை எடுக்கும் மத்திய அரசுக்கு ஆதரவளிக்கும் ஒவ்வொருவருக்கும் என் நன்றி.

 

பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை, உலக நாடுகள் பாராட்டுகின்றன. ஆனால், மோடி மீதான தனிப்பட்ட வெறுப்பால், சில அரசியல் கட்சியினர், மத்திய அரசையும், மோடியையும் கடுமையாக விமர்சிக்கின்றன. அவர்களின் இது போன்ற செயல்கள், பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளுக்கு சாதகமாகின்றன. நீங்கள் ராணுவத்தை ஆதரிக்கிறீர்களா அல்லது சந்தேகிக்கிறீர்களா என்பதை தெளிவுபடுத்த வேண்டும். இந்த மாதிரியான எதிர்மறை கருத்துக்களை வெளியிட்டு பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறார்களா? ராணுவத்தை ஆதரிக்கவில்லை என்றால் இந்த மண்ணில் ரத்தம் சிந்த வைக்கும் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறீர்களா?

 

மோடி வரலாம், போகலாம். ஆனால், நாடு நிரந்தரமானது. உங்கள் அரசியல் ஆதாயத்திற்காக, நாட்டை பலவீனப்படுத்தாதீர்கள்’ என அவர் பேசினார். 

click me!