இரட்டை இலை சின்னத்தில் வாசன் !! மாயவரத்தில் நிற்க முடிவு !!

By Selvanayagam PFirst Published Mar 2, 2019, 8:57 AM IST
Highlights

அதிமுக கூட்டணியில் இணைய தமிழ் மாநில காங்கிரஸ் காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாகவும், அதன் தலைவர் ஜி.கே.வாசனுக்கு மயிலாடுதுறை தொகுதியை ஒதுக்கித் தர முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

வரும் ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளன. இதற்கான அறிவிப்பை     இந்த வார இறுதியில் தேர்தல் ஆணையம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் திமுக தலைமையில் அமைக்கப்பட்ட கூட்டணியில் காங்கிரஸ், இடது சாரிகள், மதிமுக, விசிக போன்ற கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, எம்.ஆர்.காங்கிரஸ் கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

அதே நேரத்தில் தேமுதிகவுடன் அதிமுக பேச்சு வார்த்தை நடத்தியது. இதில் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று அதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகவுள்ளது.

இந்நிலையில் தமாக சார்பில் திமுக, அதிமுக என இரு கட்சிகளிடமும பேச்சு வார்த்தை நடைபெற்று வந்தது. வாசனுக்கு உரிய மரியாதை அளிக்க ஸ்டாலின் முடிவு செய்திருந்தார். ஆனால் திமுக கூட்டணியில் வாசனை இணைக்க ராகுல்காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்தாக கூறப்படுறது.

இதையடுத்து அதிமுக நிர்வாகிகளுடன் வாசன் பேசியுள்ளார். 2 மக்களவை மற்றும் 1 மாநிலங்களவை தொகுதிகளை வாசன் கேட்டுள்ளார். ஆனால் ஒரு மக்களவைத் தொகுதி மட்டும் ஒதுக்க வாய்ப்பு உள்ளது என்றும் அதுவும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்றும் அதிமுக சார்பில் வாசனிடம் பேசப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் வாசன் விரும்பிய மயிலாடுதுறை தொகுதியையே அவருக்கு ஒதுக்க அதிமுக சம்மத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து அதிமுகவில் தமிழ் மாநில காங்கிரஸ் இணைவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

click me!