தேமுதிகவுக்கு 7 தொகுதிகள்…. நெனச்சத சாதிச்ச கேப்டன்… மோடியுடன் கம்பீரமாக மேடை ஏறுகிறார் விஜயகாந்த்....

By Selvanayagam PFirst Published Mar 4, 2019, 10:16 PM IST
Highlights

அதிமுக – தேமுதிக கூட்டணி பேச்சு வார்த்தை முடிவு செய்யப்பட்டதையடுத்து தான் துணை முதலமைச்சர் ஓபிஎஸ், விஜயகாந்த்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசியதாகவும்  இந்த கூட்டணியில் தேமுதிகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்ககப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தமிழகத்தி,ல திமுக, அதிமுக என இரு கட்சிகளும் கூட்டணி அமைக்கத் தொடங்கின. திமுகவை முந்திக் கொண்டு அதிமுக பாஜக மற்றும் பாமக கட்சிகளுடன் கூட்டணி என அறிவிப்பை வெளியிட்டது.இதே போல் திமுகவும் காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் சேர்ந்து 10 தொகுதிகளை ஒதுக்கித் தந்தது.

அதே நேரத்தில் தேமுதிகவைக் கூட்டணிக்குள் கொண்டுவர திமுகவும், அதிமுகவும் போட்டி போட்டன. ஸ்டாலின் , கனிமொழி  உள்ளிட்டோர் இது தொடர்பாக தேமுதிகவுட்ன் பேசினர்.

ஆனால்  அதிமுக அமைச்சர் தங்கமணி மற்றும் வேலுமணி தலைமையில் ஒரு குழு விஜயகாந்த்தை தொடர்ந்து சந்தித்து வந்தனர். மேலும் பாஜகவும் விஜயகாந்த்துக்கு அழுத்தம் கொடுத்து வந்தது..

அதே நேரத்தில் மார்ச் மாதம் 6 ஆம் தேதி பிரதமர் கலந்து கொள்ளும்  பொதுக்கூட்டத்தில் கூட்டணி குறித்து அறிவிக்க உள்ளதால் அதற்குள் இறுதிப்படுத்தவேண்டிய கட்டாய சூழ்நிலையில் அதிமுகவுக்கும் அழுத்தம் கொடுக்கப்பட்டது.

அதிமுக தலைவர்களின் தொடர் பேச்சுவார்த்தையில் விஜயகாந்த் தரப்பில் பாமகவைவிட அதிக தொகுதி அல்லது அதே அளவிலான தொகுதிகள், ராஜ்யசபா தொகுதி ஒன்று, உள்ளாட்சித் தேர்தலில் 20 சதவிகிதம் என கோரப்பட்டது.

இதில் பாமகவுக்கு இணையாக 7 தொகுதிகளை அளிக்க அதிமுக தலைமை ஒப்புக்கொண்டதாகவும், உள்ளாட்சி தேர்தல் ஒதுக்கீடு குறித்து பின்னர் பேசலாம் எனக் கூறப்பட்டதாகவும், ராஜ்ய சபா சீட்டுக்குப் பதில் மத்திய அமைச்சரவையில் இரண்டு அமைச்சர் பதவிகள் வழங்க பாஜக தலைமையிடமும் பேசி தேமுதிகவை இணங்க வைத்துள்ளதாகவும் அதிமுக வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

இதை தேமுதிக தரப்பும் ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்துதான்  இன்று துணை முதலமைச்சர்  ஓபிஎஸ் திடீரென தேமுதிக தலைவர் விஜயகாந்தைச் சந்தித்தார். கூட்டணிப் பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை அடைந்ததை அடுத்து அதை உறுதிப்படுத்தவே ஓபிஎஸ் சென்றுள்ளார் என அதிமுக வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

இதன்மூலம் பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டத்தில் அதிமுக கூட்டணியில் விஜயகாந்தும் கைகோப்பார் எனவும் தேமுதிகவுக்கும் 7 தொகுதி ஒதுக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

click me!