பாரிவேந்தர் மூலம் பொன்முடிக்கு ஆப்படித்த முக்கிய புள்ளிகள்!! கள்ளக்குறிச்சி கனவை காலி பண்ணிய சதி!!

By sathish kFirst Published Mar 4, 2019, 8:00 PM IST
Highlights

திமுக கூட்டணிக்கு வந்துள்ள பாரிவேந்தருக்கு  பொன்முடி மகனை ஓரங்கட்ட  கள்ளக்குறிச்சியை கொடுப்பதால், தன் மகனுக்கு கள்ளக்குறிச்சியை பெற முடியவில்லை என்று வருத்தத்தில் இருக்கிறாராம் திமுக மூத்த தலைவர்களில் ஒருவரான பொன்முடி.  

இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவர் பாரிவேந்தர், கடந்த மார்ச் 2 ஆம் தேதி அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார். ஐஜேகேவுக்கு கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் இரண்டில் ஒரு தொகுதி கொடுக்க உள்ளதாம்.

இந்நிலையில், இன்று பாரிவேந்தரின் மகனுமான ரவி அறிவாலயத்துக்கு சென்று திமுக கூட்டணியில் ஐஜேகே கட்சிக்கு 1 தொகுதி என்ற உடன்படிக்கையில் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்திட்டார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த ரவி, “எங்களுக்கு விருப்பமான தொகுதி கள்ளக்குறிச்சிதான் அதைக் கேட்டிருக்கிறோம் விரைவில்  முடிவு செய்வோம் என்று சொல்லியிருக்கிறார்.

பாரிவேந்தர் கட்சிக்கு கள்ளக்குறிச்சி தொகுதி ஒதுக்கப்படுவது உறுதியாகிவிட்டது என சொல்கிறார்கள் திமுகவினர். இந்நிலையில், முன்னாள் அமைச்சரும் விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலாளருமான பொன்முடி  தனது மகன் கௌதம சிகாமணியை கள்ளக்குறிச்சி தொகுதியில் நிறுத்த  தீவிர முயற்சி எடுத்து வந்த நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் பல்வேறு ஒன்றிய செயலாளர்களை தனிப்பட்ட முறையில் பார்த்து தன் மகனுக்கு ஆதரவு திரட்டி வந்தார்.

அதேநேரம் பொன்முடி மகனுக்கு கள்ளக்குறிச்சி சீட் கிடைத்து எம்பி. ஆகிவிட்டால் பொன்முடியின் அதிகாரம் மீண்டும் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பரவிவிடும் என பிளான் போட்டு வந்தார். இதனால் கள்ளக்குறிச்சியில் பொன்முடி மகன் நிற்பதைத் தடுக்கும் விதமாக காய் நகர்த்தி வந்தனர். இந்நிலையில்  பாரிவேந்தருக்கு  கொடுக்கவுள்ளதால், அது பொன்முடி எதிர்ப்பாளர்களுக்கு வாய்ப்பாகிவிட்டது.

பொன்முடி தரப்பினரோ பாரிவேந்தருக்கு பெரம்பலூர் தொகுதியை ஒதுக்கிவிட வேண்டும் என்றும், அப்போதுதான் கள்ளக்குறிச்சியை பெற முடியும் என்றும் முயற்சி எடுத்தனர். ஆனால், பொன்முடி மகனுக்கு கள்ளக்குறிச்சி கிடைத்துவிடக் கூடாது என்று நினைத்த திமுகவிலேயே சிலர், பாரிவேந்தருக்கு கள்ளக்குறிச்சி தொகுதியை வாங்கி கொடுக்க மும்மரமாக இயங்கி வருகிறார்களாம் முக்கிய புள்ளிகள் சிலர்.

click me!