வேலூரில் ஜெயிக்கப்போவது A.C. சண்முகம்!! எதிர்த்து நிற்பவர்கள் கதி?

By sathish kFirst Published Mar 4, 2019, 8:31 PM IST
Highlights

பிஜேபி கூட்டணியில்  இரண்டாம் இடம் பிடித்த புதிய நீதிக்கட்சி A.C. சண்முகம், பலம் வாய்ந்த கூட்டணியில் போட்டியிட இருப்பதால் வெற்றி நிச்சயம் என சொல்கிறார்கள்.

நடக்கப்போகும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் எந்தெந்த தொகுதிகளை யார் யாரை நிறுத்துவது போன்ற கடைசி கட்டத்தில் இருக்கிறது. திமுக அதிமுக என்ற பலம் பொருந்திய இரு கட்சிகளும் தங்களை மேலும் வலுவாக்கிக்கொள்ள வெற்றித் தோல்வியை நிர்ணயிக்கக்கூடிய 3,4  சதவிகித வாக்கு வங்கிகளை வைத்திருக்கும் கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது.

திமுகவை பொறுத்தவரை துரைமுருகனின் மகன் கதிரானந்த்துக்கு கொடுக்கப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகியிருக்கிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது தனது மகனுக்காக துரைமுருகன் சீட் கேட்டிருந்தார். அப்போது கிடைக்காத நிலையில் இப்போது சீட் எப்படியும் கிடைத்துவிடும் என்பதால் தன மகனை போட்டிக்கு தயார் படுத்தி வருகிறார் துரைமுருகன்.

கடந்த சில நாட்களாக ஊராட்சி சபைகளில் கலந்துகொள்ளும் துரைமுருகன் அதற்காக ஆலங்காயம், நாட்றாம் பள்ளி ஒன்றியங்களுக்கு செல்கிறபோது ஆங்காங்கே இருக்கிற தனது நண்பர்களான தொழிலதிபர்களையும், லோக்கல் கட்சி நிர்வாகிகளையும் சந்தித்து வருகிறார். இது தவிர செயல்வீரர்கள் கூட்டம் உள்ளிட்ட திமுக நிகழ்ச்சிகள் பலவற்றிலும் கலந்துகொண்டார் துரைமுருகன்.

அதிமுக கூட்டணியில், புதிய நீதிக் கட்சி கூட்டணி உடன்பாடு இன்று கையெழுத்தாகிறது என சொல்லப்படுகிறது. கடந்த முறை இந்த தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட செங்குட்டுவன் 387719 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.  

பாஜக கூட்டணியில் இந்த தொகுதியில் களம் கண்ட புதிய நீதிக்கட்சி A.C. சண்முகம் 324326 வாக்குகளை பெற்று இரண்டாம் இடத்தை பெற்றிருந்தார்.  சுமார் 50 கோடிக்கு மேல் பணத்தை வாரி இறைத்து அதிமுக வேட்பாளரை விட குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலேயே இவர் இங்கு தோல்வியை தழுவினார். அப்போது பிஜேபி கூட்டணியில் பெரிய கட்சி என்று கூறுவதாக இருந்தால் பாமக மட்டுமே என சொல்லலாம். அவர்களுக்கு இங்கு குறிப்பிடத்தக்க வாக்கு வங்கி உள்ளது. 

இம்முறை அதிமுக, பாமக, பிஜேபி எல்லாம் ஓரணியில் இருப்பது ஒரு பலமாக இருந்தாலும், இரட்டை இல்லை சின்னம், ரஜினியின் மறைமுக ஆதரவும், ஏற்கனவே பார்த்து வைத்த வேலை அதாவது 50 கோடி ரூபாய் வரை செலவு செய்திருந்தது. இது போக பாமக வாக்கு வங்கியை பலமாக வைத்திருக்கும் தொகுதிகளில் ஒன்றாக இது இருப்பதால் வெற்றி உறுதியென சொல்லப்படுகிறது.

click me!