பாகுபலி நல்லவர்களுக்கு தீபாவளி ; கெட்டவர்களுக்கு நரபலி.!! பாகுபலி கெட்டப்பில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.!!

Published : Feb 23, 2020, 08:44 PM ISTUpdated : Feb 23, 2020, 09:06 PM IST
பாகுபலி  நல்லவர்களுக்கு தீபாவளி ; கெட்டவர்களுக்கு நரபலி.!! பாகுபலி கெட்டப்பில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.!!

சுருக்கம்

இந்தியா வரும் அமெரிக்கா அதிபர் டொனால்டு ட்ரம்ப்க்கு 100 கோடி செலவில் பிரமாணடமான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க தேர்தலுக்கான விளம்பரமாக இருக்க கூடாது என்று காங்கிரஸ் கட்சி எச்சரிக்கை செய்துள்ளது குறிப்பிட தக்கது.இந்த நிலையில் ட்ரம்ப் ட்விட்டரில் தன்னை பாகுபலியாக சித்தரித்து வீடியோ வெளியிட்டிருக்கிறார்.

T.balamurukan

அமெரிக்க அதிபர் டிரம்ப் 2 நாள் பயணமாக நாளை இந்தியா வருகிறார். அவரை வரவேற்கும் விதமாக அகமதாபாத், டெல்லி, ஆக்ரா நகரங்கள் விழாக்கோலம் பூண்டு உள்ளது.அமெரிக்க அதிபரி இந்திய பயணம் அவரது வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும் என்று மோடி சொன்னது போல் செய்து கொண்டிருக்கிறார். அவருக்கு நினைவு பரிசு வழங்க பல்வேறு துறைகளில் இருந்து பரிசு பொருட்களை தயாரித்தும், அனுப்பியும் வருகின்றனர்.இந்தநிலையில் டிரம்ப்பை பாகுபலியாக சித்தரிக்கும் மீம்ஸ் வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது.

 பாகுபலியில் இருக்கும் கதாநாயகன் 'பிரபாஸ்' முகத்திற்கு பதிலாக அமெரிக்க அதிபர் டிரம்ப் முகத்தை பொருத்தி மார்பிங் செய்துள்ளார். மேலும் டிரம்பின் மனைவி மெலானியா, பிரதமர் மோடிக்கு சில பாத்திரங்கள் உள்ளன.93 வினாடிகள் ஓடும் இந்த மீம்ஸ் வீடியோவை டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர் ரீடுவிட் செய்து இந்தியாவின் பயணத்தை ஆவலுடன் எதிர்நோக்கி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
டிரம்ப் வெளியிட்டுள்ள இந்த பாகுபலி மீம்ஸ் வீடியோவை சில மணி நேரத்தில் 6 லட்சம் பேர் வரை பார்த்துள்ளனர்.

டிரம்ப்பை வைத்து இதுவரை ஆயிரக்கணக்கான மீம்ஸ்கள் வந்துள்ளன. இந்த பாகுபலி வீடியோவை டிரம்ப் பகிர்ந்ததற்கு பல அமெரிக்கர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். பாகுபலி" - கெட்டவர்களுக்கு நரபலி.. நல்லவர்களுக்கு தீபாவளி. இந்த வசனம் அமெரிக்காவுடன் நட்பு வைத்திருக்கும் நாடுகளுக்கு நல்ல நண்பன் என்றும், எதிரி நாட்டுக்கு அமெரிக்கா நரபலியாக இருக்கும் என்று எச்சரிக்கை செய்வதற்காக பாகுபலியை பயன்படுத்தியிருக்கிறார் ட்ரம்ப்.

PREV
click me!

Recommended Stories

கணினி நிபுணர் பழனிசாமி.. நீங்க இல்ல; டெல்லி ஓனர் நினைத்தாலும் தடுக்க முடியாது.. உதயநிதி சவால்!
திமுகவும், ஃபெவிக்கால் ஃபிரண்ட்ஷிபும்..! கவர்ண்மென்ட் நடத்துறீங்களா? கண்காட்சி நடத்துறீங்களா..? பங்கம் செய்த விஜய்..!