அல்லேலுயா! தமிழ்நாட்டையே அசைக்கணும்யா..! வான்டட் ஆக வம்பில் சிக்கிய மோகன் சி.லாசரஸ்..!

By Vishnu PriyaFirst Published Feb 23, 2020, 5:52 PM IST
Highlights

பெந்தேகொஸ்தே சபைகளில் அறுபது லட்சம் விசுவாசிகள் இருப்பதகாச் சொல்லப்பட்டது. இந்த ஆண்டு 2020ல் ஒரு விசுவாசி ஒரு ஆத்மாவை நம் சபைக்கு கொண்டு வந்தால், அடுத்த வருடம் விசுவாசிகளின் எண்ணிக்கை ஒரு கோடியே இருபது லட்சமாக உயர்ந்துவிடும். அதற்கு அடுத்த வருடங்களில் அது இரு மடங்காகி, ஆகி மூன்றே வருடங்களுக்குள் தமிழ்நாடே அசைந்துவிடும்.’ என்று பேசினார். 

இந்தியாவில் இந்து மக்களுக்கு நிகராக கிறுத்துவ மற்றும் இஸ்லாமிய மக்களும் சர்வ சுதந்திரமாகவும், முழு அமைதியுடனும் வாழும் மாநிலங்களில் மிக முக்கியமானது தமிழகம். இந்த மண்ணில் ஆங்காங்கே இந்து - இஸ்லாமியர் உரசல்கள் கூட எப்போதாவது எழுந்து, அடங்கிவிடும். ஆனால் இந்துக்கள் மற்றும் கிறுத்துவர்களுக்கு இடையில் எந்த சிக்கலும் பெரிதாய் எழுவதில்லை. இந்த நிலையில்,  மிக பிரபலமான கிறுத்துவ மத போதகரான மோகன் சி.லாசரஸ் சமீபத்தில் பேசியிருக்கும் பேச்சானது, மேற்படி ஒற்றுமைக்கு உலை வைத்து, மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது! என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். இது பற்றி அவர்களிடம் விளக்கம் கேட்டபோது....“மோகன் சி.லாசரஸ் மிக அருமையான போதகர். கண்களை மூடி அவரது ஜெபத்தை கேட்டால் போதும், ஆறாய் பெருக்கெடுத்து ஓடிவிடும் கண்ணீர். ஆண்டவர் மீது அப்படியொரு விசுவாசி அவர். இந்த தேசத்தில் கிறுத்துவ மதத்திற்கு கன்வர்ட் ஆனவர்களின் மொத்த எண்ணிக்கையில் கணிசமான சதவீதம் இவரது ஜெபத்தினால் ஈர்க்கப்பட்டவர்கள்தான்.


அப்படிப்பட்ட பெருமைக்கு சொந்தக்காரரான லாசரஸுக்கும், சர்ச்சைகளுக்கும் நெருங்கிய தொடர்பு எப்போதுமே உண்டு. தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டிணம் முத்தாரம்மன் கோயிலின் நவராத்திரி திருவிழா குறித்து வாய்த்துடுக்காக இவர் பேசிட, அதற்காக வகையாய் விமர்சித்துக் கொட்டினர் பக்தர்கள். அதேபோல் ‘தமிழ்நாட்டில் பெரிய பெரிய கோயில்கள் மற்றும் கோபுரங்கள் சாத்தான்களுக்கு அரணாக விளங்குகின்றன.’ என்றார். இது பெரும் கொந்தளிப்பை உருவாக்கியது. அதோடு அடங்கினாரா? இல்லை. ‘கும்பகோணத்தில் கிரகிக்க முடியாதபடி சாத்தான்கள் வேரூன்றி இருக்கின்றன’ என்று சொல்லி இந்துக்களை வம்புக்கு இழுத்தார். இப்பேர்ப்பட்ட மோகன் சி.லாசரஸ், சமீபத்தில் ’பெந்தேகொஸ்தே சபைகளில் அறுபது லட்சம் விசுவாசிகள் இருப்பதகாச் சொல்லப்பட்டது. இந்த ஆண்டு 2020ல் ஒரு விசுவாசி ஒரு ஆத்மாவை நம் சபைக்கு கொண்டு வந்தால், அடுத்த வருடம் விசுவாசிகளின் எண்ணிக்கை ஒரு கோடியே இருபது லட்சமாக உயர்ந்துவிடும். அதற்கு அடுத்த வருடங்களில் அது இரு மடங்காகி, ஆகி மூன்றே வருடங்களுக்குள் தமிழ்நாடே அசைந்துவிடும்.’ என்று பேசினார். இது மிகப்பெரிய பிரளயத்தை உருவாக்கி இருக்கிறது. இந்து முன்னணியினர் உள்ளிட்டோர்  ‘மோகன் சி.லாசரஸ் தடையை மீறி மிக வெளிப்படையாக மதமாற்றம் செய்கிறார். அது மட்டுமில்லாமல் தமிழகத்தையே அசைத்துவிடுவோம்! என்று மாநில பாதுகாப்புக்கு எதிராக பேசுகிறார். அவர் மீது மிக கடுமையாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.’ என்று கொதித்துள்ளனர். 


மோகன் சி. லாசரஸுக்கு ஆதரவாக சில கிறுத்துவ அமைப்புகள், இந்துக்களுக்கு எதிர்ப்பு காட்ட துவங்கியுள்ளனர். ‘லாசரஸ் மீது கைது நடவடிக்கை ஏதும் பாய்ந்தால் நாங்கள் பொறுக்க மாட்டோம்!’ என்று பொங்கியுள்ளனர். ஆக இந்து - கிறுத்துவ அமைதிக்கு இவரால் பங்கம் வந்துவிட்டது! என்பதே பொதுவான குற்றச்சாட்டாகி இருக்கிறது.” என்கின்றனர். ஆனால் மோகன் சி.லாசரஸின் நடத்தும் சபையின் மேனேஜரான செல்வகுமாரோ “கோவையில் நடந்த ஒரு ஆலய வளர்ச்சி குறித்த ஆலோசனை சார் இப்படி பேசினார். அந்த கூட்டத்தில் அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள் கூட கலந்து கொண்டனர். எந்த உள்நோக்கமும் இல்லாமல்தான் அவர் இப்படி பேசினார். யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமில்லை.” என்று குறிப்பிட்டுள்ளார். அல்லேலுயா!

click me!