நாளை டிரம்ப் பராக்.. பராக்..! விழாக்கோலத்தில் குஜராத்..!

By Manikandan S R SFirst Published Feb 23, 2020, 5:44 PM IST
Highlights

ஏர் போர்ஸ் ஒன் விமானதில் இந்தியா வரும் டிரம்ப் குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் பகல் 12.30 மணிக்கு தரையிறங்குகிறார். அவரை பிரதமர் மோடி நேரில் வரவேற்க உள்ளார். 

அமெரிக்கா அதிபர் டொனால்டு ட்ரம்ப் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியா வருகிறார். 24 மற்றும் 25 ஆகிய இரண்டு நாட்கள் இந்தியாவில் டிரம்ப் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதுடன் இரு நாடுகளுக்கிடையேயும் பல முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாக இருக்கின்றன. டிரம்ப்பின் இந்திய வருகை உலக நாடுகளை உற்று நோக்க வைத்துள்ளது.

ஏர் போர்ஸ் ஒன் விமானதில் இந்தியா வரும் டிரம்ப் குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் பகல் 12.30 மணிக்கு தரையிறங்குகிறார். அவரை பிரதமர் மோடி நேரில் வரவேற்க உள்ளார். அங்கிருந்து இருவரும் சாலைமார்க்கமாக சபர்மதி ஆசிரமத்திற்கு செல்கின்றனர். செல்லும் வழிமுழுவதும் 50 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் திரண்டு வரவேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆசிரமத்தில் மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்துகிறார். அதிபர் டிரம்ப்பிற்கு காந்தி நினைவாக நூல் ராட்டையும், புத்தகமும் மோடி பரிசாக வழங்குகிறார். தொடர்ந்து உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான மோதேரா மைதானத்தில் நடைபெறும் “நமஸ்தே டிரம்ப்” நிகழ்ச்சியில் டிரம்பும், மோடியும் உரைநிகழ்த்த இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் ஒரு லட்சத்துக்கு அதிகமானோர் கலந்து கொள்கிறார்கள்.

பின் தனது மனைவியுடன் ஆக்ராவில் இருக்கும் தாஜ் மகாலுக்கு டிரம்ப் செல்கிறார். இரவு டெல்லியில் தங்கும் டிரம்ப் 25 ம் தேதி ஜனாதிபதி மாளிகையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திக்க இருக்கிறார். அங்கு அவருக்கு பிரம்மாண்ட அணிவகுப்பும் சிறப்பு விருந்தும் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. அதன்பிறகு ராஜ் காட்டில் இருக்கும் மகாத்மா காந்தியின் சமாதியில் அஞ்சலி செலுத்தும் அமெரிக்க அதிபர் அங்கு அரச மரம் நடுகிறார். இறுதியாக டெல்லி ஹைதாராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியும் அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் பேச்சுவார்த்தை நடத்த இருக்கின்றனர். அப்போது இருநாடுகளின் உறவை மேம்படுத்தும் விதமாக பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக இருக்கின்றன. அதைமுடித்து கொண்டு இரவு 10 மணியளவில் டிரம்ப் அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார்.

மன் கி பாத்தில் ஒலித்த 'அவ்வையார்' பாடல்..! மீண்டும் தமிழை பெருமைபடுத்திய பிரதமர் மோடி..!

சுமார் 36 மணி நேரங்கள் இந்தியாவில் அமெரிக்க அதிபர் இருப்பதை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கு முன்பாக அமெரிக்க அதிபராக இருந்த அதிபர்களாக இருந்த பில் கிளிண்டன், ஒபாமா ஆகியோர் இந்தியா வந்திருந்தனர். ஒபாமா 2 முறை (2010, 2015) வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

click me!