பிரஷாந்த் கிஷோரை மிஞ்சிய அதிரடி... மு.க.ஸ்டாலின் புகழடைய பாமக ராமதாஸ் போட்டுக் கொடுத்த 5 ஐடியா..!

By Thiraviaraj RMFirst Published Feb 23, 2020, 4:20 PM IST
Highlights

விவசாயிகளின் பாதுகாவலனாக மாற 5 எளிய வழிகளை மு.க.ஸ்டாலினுக்கு வகுத்துக் கொடுத்துள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

விவசாயிகளின் பாதுகாவலனாக மாற 5 எளிய வழிகளை மு.க.ஸ்டாலினுக்கு வகுத்துக் கொடுத்துள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’விவசாயிகளின் பாதுகாவலனாக மாற எளிய வழிகள்: 1. கரும்புத் தோட்டத்துக்கு கான்கிரீட் பாதை அமைத்து செல்ல வேண்டும், 2. மீத்தேன் திட்டத்திற்கு கையெழுத்திட வேண்டும், 3. பெட்ரோலிய மண்டலத்தை அனுமதிக்க வேண்டும். 4.பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்பதன்  பெயரும், பொருளும் கூட தெரியாமல் சிறப்பு பொருளாதார மண்டலம் என்று உளற வேண்டும். 5. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மசோதா வாக்கெடுப்பின் போது வழக்கம் போல வெளிநடப்பு செய்ய வேண்டும்!

தமிழ்நாட்டில் கடைகளின் பெயர்ப்பலகைகள் தமிழில் எழுதப்படாததற்காக விதிக்கப்படும்  அபராதம் உயர்த்தப்படும் என அமைச்சர் பாண்டியராஜன் 
 கூறியிருக்கிறார். மகிழ்ச்சி. ஆனால், அபராதமே விதிக்க முடியாத அளவுக்கு அனைத்து பெயர்ப்பலகைகளும் தமிழில் மாறினால் அதில் தான் மட்டற்ற மகிழ்ச்சி!

தமிழ்நாட்டு விமான நிலையங்களில் தினமும் பிடிபடும் கடத்தல் தங்கத்தை விட, தப்ப விடப்படும் தங்கத்தின் மதிப்பு 10 மடங்குக்கும் அதிகம் என்று சுங்கத்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறுகிறார். இது உண்மையா?’’என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 

விவசாயிகளின் பாதுகாவலனாக மாற எளிய வழிகள்: 1. கரும்புத் தோட்டத்துக்கு கான்கிரீட் பாதை அமைத்து செல்ல வேண்டும், 2. மீத்தேன் திட்டத்திற்கு கையெழுத்திட வேண்டும், 3. பெட்ரோலிய மண்டலத்தை அனுமதிக்க வேண்டும், (1/2)

— Dr S RAMADOSS (@drramadoss)

 

click me!