பொது தொகுதியில் திருமா நின்றால் வெற்றி பெறுவது கடினமா..? கிருஷ்ணசாமி மகன் நெத்தியடி விளக்கம்..!

Published : Feb 23, 2020, 05:42 PM IST
பொது தொகுதியில் திருமா நின்றால் வெற்றி பெறுவது கடினமா..? கிருஷ்ணசாமி மகன் நெத்தியடி விளக்கம்..!

சுருக்கம்

பொது தொகுதியில் திருமா நின்றால் ஏன் வெற்றி பெறுவது கடினமா? என்பதற்கு புதிய தமிழகம் கட்சித் தலைவர் மகன் ஷ்யாம் கிருஷ்ணசாமி விளக்கமளித்துள்ளார்.  

பொது தொகுதியில் திருமா நின்றால் ஏன் வெற்றி பெறுவது கடினமா? என்பதற்கு புதிய தமிழகம் கட்சித் தலைவர் மகன் ஷ்யாம் கிருஷ்ணசாமி விளக்கமளித்துள்ளார்.

விசி கட்சி தலைவர் திருமாவளவன் பொது தொகுதியை கேட்டபோது உங்களுக்கு எல்லாம் தனிதொகுதி தான். பொதுதொகுதி இல்லை என்று கலைஞர் சொன்னது திமுகவின் சமூகநீதி கொள்கைப்படி தானா? என நெட்டிசன் ஒருவர் கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு பதிலளித்த மற்றொருவர், ‘’பொது தொகுதியில் திருமா நின்றால் வெற்றி பெறுவது கடினம் என்பதை உணர்ந்தவர் கலைஞர். அதைத்தான் சொன்னார். கடந்த 2019 தேர்தலில் திருமாவளவன் தனித்தொகுதியில் போட்டியிட்டு அவர் வெற்றிக்காக பட்ட பாடு சரி என புரிய வைத்திருக்கும்.தனித்தொகுதியில் பட்டியலினத்தோர் உரிமை. அது இழிவல்ல’’ எனத் தெரிவித்து இருந்தார். 

இதற்கு விளக்கமளித்துள்ள புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி மகன் ஷ்யாம் கிருஷ்ணசாமி, ‘’பொது தொகுதியில் திருமா நின்றால் ஏன் வெற்றி பெறுவது கடினம்? பறையர் ஓட்டு அதிகமாக இருந்தா வெற்றி பெற போகிறார். இதற்கு தனி தொகுதி  தேவையில்லையே. பொது தொகுதியாக இருந்தாலும் அதே மக்கள் தான் ஓட்டு போட போகிறார்கள். இழிவோ, உரிமையோ- அது எந்த பயனும் இல்லை என்று 70 ஆண்டுகள் உணர்த்திவிட்டது’’ எனத் தெரிவித்துள்ளார்.

 

PREV
click me!

Recommended Stories

ஓநாய்களிடம் சிறுபான்மையினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்..! கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன இபிஎஸ்..!
125 நாள் வேலையை வரவேற்கிறோம்..! ஆனால்..? பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!