
சசிகலாவை இனி சகோதரி என்று அழைக்க மாட்டேன் என தெரிவித்துள்ள அவரது சகோதரர் திவாகரன் சசிகலாவிடம் இருந்து எங்களது குடும்பம் விலகி விட்டதால் எங்களை இனி மாஃபியா குடும்பம் என யாரும் அழைக்க மாட்டார்கள் என தெரிவித்தார்.
அண்மைக்காலமாக டி.டி.வி.தினகரன் மற்றும் திவாகரன் குடும்பத்தினரிடையே நடைபெற்று வந்த பனிப்போர் இப்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அவர்கள் இருவரும் ஒருவர் மேல் ஒருவர் குற்றச்சாட்டுககளை சுமத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மன்னார்குடியில் வசிக்கும் திவாகரன் சசிகலாவின் பெயரை பயன்படுத்தக் கூடாது என சசிகலா சார்பில் திவாகரனுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இகு குறித்து மன்னார்குடியில் சசிகலாவின் சகோதரர் திவாகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது எனக்கு மன நலம் சரியில்லை என்று என் மீது உள்ள ஆதங்கத்தில் தினகரன் கூறி உள்ளார்என குற்றம்சாட்டினார்.
சசிகலாவை இனி நான் சகோதரி என்று அழைக்க மாட்டேன்; அவர் என் முன்னாள் சகோதரி. அதே நேரத்தில் சசிகலா நோட்டீஸ் தந்ததால் எங்கள் அரசியல் பயணம் ஒன்றும் நின்று விடாது என சவால்விட்டார்.
மூன்று முறை ஜெயலலிதாவின் உயிரை காப்பாற்றியவன் நான் . என்னை குடும்பத்தில் இருந்து நீக்கியதற்கு சசிகலாவிற்கு மிகுந்த நன்றி என தெரிவித்தார். அதே நேரத்தில் நாங்கள் சசிகலா குடும்பத்தில் இருந்து விலகியதால் இனி எங்களை யாரும் மாபியா குடும்பம் என அழைக்கமாட்டர்கள் என்றும் திவாகரன் தெரிவித்தார்.