தனக்குப்பின் அதிமுக-வே இருக்கக்கூடாது என நினைத்தார் ஜெயலலிதா... பகீர் கிளப்பும் திவாகரன்!

Published : Dec 05, 2018, 10:50 AM ISTUpdated : Dec 05, 2018, 10:56 AM IST
தனக்குப்பின் அதிமுக-வே இருக்கக்கூடாது என நினைத்தார் ஜெயலலிதா...  பகீர் கிளப்பும் திவாகரன்!

சுருக்கம்

தனக்குப்பின் அ.தி.மு.க.வே இருக்கக்கூடாதென நினைத்தார்  ஜெயலலிதா என பிரபல வார இதழுக்கு  சசிகலாவின் தம்பி திவாகரன் பேட்டியளித்துள்ளார்.  

ஜெயலலிதா அரசியலை விட்டு விலக நினைத்தாரா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர்; உடல்நலம் சரியில்லாமல் அவர் இருந்தார்.ஆனாலும் அரசியலைவிட்டு விலகும் எண்ணம் அவருக்கு இல்லைதான். ஆனாலும், அரசியலைவிட்டு விலகப்போகிறேன்; எனக்கு அரசியல் வேண்டாம் என்று தினம்தோறும் சொல்லிக்கொண்டிருந்தார். அப்போது அவருடன் இருந்த சிலர் கூத்தாடிக்கொண்டிருந்தனர். அவர்களை எச்சரிக்கவே ஒருவேளை இப்படி சொல்லியிருக்கலாம்.

ஜெயலலிதாவின் சொத்துக்கு வாரிசு யார் என்றதற்கு, ரத்த உறவான தீபாவும்,தீபக்கும் தான் வாரிசு, ஆனால் அவர்களின் பெற்றோரின் செயல்பாடுகள் பிடிக்காததால் ஒதுக்கிவிட்டார் அம்மா எனக் கூறினார்.

அரசியல் வாரிசு யார் என்ற கேள்விக்கு; அவர் நினைத்திருந்தால் அவர் உயிரோடு இருந்தபோதே அரசியல் வாரிசு யார் என அறிவித்திருக்கலாம், அவருக்கு யாரையும் பிடிக்கவில்லை, எங்கள் குடும்பத்தையும் விரும்பவில்லை, ஒருவேளை தனக்கு பின் அதிமுகவே வேண்டாம் என நினைத்திருக்கலாம் என அடுத்த குண்டை தூக்கிப்போட்டார்.

ஜெயலலிதாவிடம் இருந்த கணக்கில் வராத பணம் சசிகலா குடும்பத்தில் இருப்பதாக சொல்கிறார்களே என கேட்டதற்கு; அப்படி இருக்க வாய்ப்பே இல்லை, 2011 ஆம் ஆண்டு ஒரு டீம் பெரிய லாபி செய்து, சசிகலாவை போயஸ் கார்டன் வீட்டிலிருந்தே வெளியே அனுப்பியது. சில நாட்களுக்கு பிறகு சமாதானமாகி சசிகலாவும் கார்டனுக்குள் சென்றார். அதற்குப்பிறகும் ஜெயலலிதா சொல்வதை சசிகலா கேட்பதில்லை, அதனால் தான் ஜெயலலிதா நால்வர் அணி அமைத்தார். இப்போது இருக்கும் அந்த அமைச்சர்களிடம் அந்த மொத்த பணமும் இருக்கிறதென தனது அக்காவை காட்டிக்கொடுக்காமல் பதிலளித்துள்ளார்.

ஜெயலலிதாவிற்கு ஸ்லோ பாய்சன் கொடுக்கப்பட்டதா எனக் கேட்டதற்கு... ஒரு மாத்திரை சாப்பிடவே ஆயிரம் டாக்டர்களிடம் ஆலோசனைக்கு கேட்பவர். அவரது அறுபதாவது பிறந்தநாள் விழாவில் எங்கள் குடும்பத்தில் 60 வயதுக்கு மேல் யாரும் உயிருடன் இருந்ததில்லை நான் இப்போது இருப்பது போனஸ் தான் என சொன்னார். ஆனால் அமைச்சர்கள் தான் வாய்க்கு வந்ததை பேசுகிறார்கள் எனக் கூறினார்.

சசிகலாவை தினகரன் சிறையின் சந்தித்துவிட்டு வெளியில் வந்து சொல்வதெல்லாம் உண்மையா என்ற கேள்விக்கு... சமீபத்தில் தினகரன் சிறைக்கு செல்வதோடு சரி, சசிகலாவை சந்திப்பதே இல்லை. சசி சொல்வதையும் கேட்பதில்லை, யாரையும் அவர் மதிப்பதில்லை. அவரே ஒரு முடிவெடுத்து பேசி வருகிறார் எனக் கூறினார். 
 

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!