யாதவ சமூகத்திற்கு அவமரியாதை. ராஜகண்ணப்பன், பெரியகருப்பன் அமைச்சர் பதவியை ராஜினமா செய்வார்களா? ஜெயக்குமார் .

By Ezhilarasan BabuFirst Published Aug 16, 2021, 2:32 PM IST
Highlights

ஸ்டாலின் மிசாவில் கைது செய்யப்பட்டாரா இல்லையா என்பது குறித்து உண்மை கதை அனைவருக்கும் தெரியும். புரட்சித்தலைவர் எம்ஜிஆரைஅவமதிக்கும் விஷயத்தை அதிமுக ஒருபோதும் ஏற்காது, வளர்ந்துவரும் ஒரு இயக்குனரை மதிக்கிறோம், ஊக்குவிக்க தயாராக இருக்கிறோம், ஆனால் கண்டனம் தெரிவித்த பிறகும் சில காட்சிகளை மாற்றாதது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என அவர் கூறியுள்ளார். 

இந்திய சுதந்திரத்திற்காக பல இன்னல்களை அனுபவித்த  மாவீரன் அழகுமுத்துக்கோன் வரலாற்றை மறைக்க திமுக முயற்சி செய்துள்ளது. அதேபோல் நேற்று வெளியிட்ட விடுதலை போராட்ட வீரர்களின் பட்டியலில், அழகுமுத்துக்கோன் பெயர் இல்லை, இது யாதவர் சமுதாயத்தின் உணர்வுகளை அவமதிக்கும் செயல், இதை கண்டித்து திமுக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள, ராஜகண்ணப்பன் மற்றும் பெரியகருப்பன் ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்வார்களா.? என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார். 
அதேபோல், சர்க்கார் திரைப்படம் ஸ்டாலினை முன்னிறுத்த முயற்சிக்கும் ஒரு படமாக உள்ளது. அது திமுகவிடம் பணம் பெற்றுக்கொண்டு திமுகவின் பிரச்சார படமாக எடுக்கப்பட்டுள்ளதோ என்ற எண்ண தோன்றுகிறது எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். 

அண்ணா தொழிற்சங்கத்தின் சென்னை தெற்கு மாவட்ட போக்குவரத்து கழக நிர்வாகிகளின், தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் சென்னை வேளச்சேரியில் உள்ள அம்மா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த வேட்புமனு தாக்கல் செய்யும் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார், பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: வரும் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக-பாமக தோழமை தொடர்கிறது, உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணியை ராமதாஸ் தற்போது வரையிலும் ஏற்றுக் கொண்டுள்ளார். தேர்தலின்போது ஏராளமான வாக்குறுதிகளை கொடுத்து விட்டு, தற்போது அதை நிறைவேற்ற முடியாமல் திமுக திணறுகிறது. அதற்காக அடுத்தவர்கள் மீது பழி போட்டு முதல்வர் ஸ்டாலின் கிரேட் எஸ்கேப் ஆகிறார். எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே பாடல் திமுகவுக்கு பொருந்தும். அர்ச்சகராக நியமிக்கப்படுவோர் நிச்சயமாக ஆகம விதிகளை முறையாக கற்க வேண்டும்.

அதேபோல, புதிதாக வெளியாகி இருக்கிற சார்பட்டா திரைப்படம் முழுக்க முழுக்க திமுகவின் பிரச்சார படமாகவே உள்ளது, அந்த திரைப்படத்தின் சில காட்சிகள் உண்மைக்கு மாறாக எடுக்கப்பட்டுள்ளது, ரியல் ஸ்போர்ட்ஸ்மேன் எம்ஜிஆர்தான், திரைப்படத்தில் மட்டுமல்ல அரசியலிலும் ரியல் ஒரிஜினல் ஹீரோ அவர்தான், குத்துச்சண்டை வீரர் முகமது அலியை சென்னைக்கு அழைத்து வந்து, குத்துச்சண்டை ஊக்குவித்தவர் எம்ஜிஆர்தான், சத்யராஜ் போன்ற நடிகர்களுக்கும் அது நன்கு தெரியும், ஆனால் அந்த படத்தில் திமுகதான் விளையாட்டை ஊக்குவித்தது என்பது போல படம் எடுக்கப்பட்டுள்ளது. படத்தை எடுப்பதற்கு திமுகவிடம் பணம் வாங்கி இருக்கலாம் என்று தோன்றுகிறது. சர்க்கார் திரைப்படம் முழுக்க முழுக்க ஸ்டாலினை முன்னிறுத்த முயற்சிக்கும் படமாகவே உள்ளது.

ஸ்டாலின் மிசாவில் கைது செய்யப்பட்டாரா இல்லையா என்பது குறித்து உண்மை கதை அனைவருக்கும் தெரியும். புரட்சித்தலைவர் எம்ஜிஆரைஅவமதிக்கும் விஷயத்தை அதிமுக ஒருபோதும் ஏற்காது, வளர்ந்துவரும் ஒரு இயக்குனரை மதிக்கிறோம், ஊக்குவிக்க தயாராக இருக்கிறோம், ஆனால் கண்டனம் தெரிவித்த பிறகும் சில காட்சிகளை மாற்றாதது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என அவர் கூறியுள்ளார். அதேபோல சுதந்திர தினத்தன்று விடுதலைப் போராட்ட வீரர்களில் பட்டியலில் அழகுமுத்துக்கோன் பெயர் இடம் பெறவில்லை, மாவீரன் அழகுமுத்து கோனின் வரலாறை திமுக மறைக்க முயல்கிறது, இது அவர் சார்ந்த யாதவ சமுதாயத்தை அவமதிக்கும் செயல், திமுகவில் அமைச்சரவையில் யாதவ சமுதாயத்தை சேர்ந்த ராஜகண்ணப்பன், பெரியகருப்பன் கோபத்தில் அமைச்சர் பதவியை ராஜினமா செய்வார்களா.? என ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார்.
 

click me!