ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க இனி இது கட்டாயம்... அமைச்சர் சக்கரபாணி அதிரடி உத்தரவு..!

By Thiraviaraj RMFirst Published Aug 16, 2021, 2:25 PM IST
Highlights

குடும்பத்தில் இருந்து 5 வயதுக்கு மேற்பட்ட யாரேனும் கைரேகை வைத்து பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்

நியாயவிலைக் கடையில் பொருட்கள் வாங்க வேண்டுமென்றால் குடும்பத் தலைவரின் கடிதம் கட்டாயம் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

 

வயதானோருக்கு பதில் யார் ரேஷன் பொருட்கள் பெறலாம்? என்பது குறித்து உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி விளக்கம் அளித்தார். ''குடும்பத்தில் இருக்கும் வேறுநபர்கள் யரேனும் நியாயவிலைக் கடையில் பொருட்கள் வாங்க வேண்டும் என்றால் குடும்பத் தலைவரின் கடிதம் கட்டாயம். குடும்பத்தில் இருந்து 5 வயதுக்கு மேற்பட்ட யாரேனும் கைரேகை வைத்து பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என சட்டப்பேரவையில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். 

அனைத்து இல்லத்தரசிகளுக்கும் 1000 ரூபாய் என வாக்குறுதி கொடுத்தீர்கள் ஆனால் தற்போது ஏழ்மையான குடும்பத்திற்கு மட்டும் என சொல்றீங்க” என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த உணவுத்துறை  அமைச்சர் சக்கரபாணி, ஏழ்மையான குடும்பங்களுக்கு மட்டுமல்லாமல் தகுதி வாய்ந்த அனைத்து இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 வழங்கப்படும் என்றும் இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டத்தை முதல்வர் கண்டிப்பாக செயல்படுத்துவார் என்றும் தெரிவித்தார்.

click me!