நல்ல நாள் அதுவுமா இப்படி பண்றீங்க... உங்களுக்கு மனசாட்சியே இல்லையா... எரிமலையாய் வெடித்த டிடிவி.தினகரன்..!

Published : Jan 13, 2021, 01:58 PM IST
நல்ல நாள் அதுவுமா இப்படி பண்றீங்க... உங்களுக்கு மனசாட்சியே இல்லையா... எரிமலையாய் வெடித்த டிடிவி.தினகரன்..!

சுருக்கம்

பொங்கல் விழா நேரத்தில் சென்னை மாநகராட்சியில் 700 தூய்மை பணியாளர்களை பணி நீக்கம் செய்திருப்பது மனசாட்சியற்ற செயல் என டிடிவி. தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பொங்கல் விழா நேரத்தில் சென்னை மாநகராட்சியில் 700 தூய்மை பணியாளர்களை பணி நீக்கம் செய்திருப்பது மனசாட்சியற்ற செயல் என டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- கொரோனா பெருந்தொற்று தீவிரமாக இருந்த நேரத்தில் தங்கள் இன்னுயிரையும் பொருட்படுத்தாமல், முன்களப்பணியாளர்களாக நின்ற  தூய்மைப்பணியாளர்கள் சுமார் 700 பேரை சென்னை மாநகராட்சி திடீரென வேலையை விட்டு நீக்கி இருப்பது கடுமையான கண்டனத்திற்குரியது.

அதிலும் பொங்கல் பண்டிகை நேரத்தில் இப்படி மாநகராட்சி நிர்வாகம் செய்திருப்பது மனசாட்சியற்ற செயல். உடனடியாக இந்த உத்தரவை திரும்பப் பெற்று, பாதிக்கப்பட்டுள்ள தூய்மைப்பணியாளர்கள் அனைவருக்கும் மீண்டும் பணி வழங்கிட வேண்டுமென சென்னை மாநகராட்சியை வலியுறுத்துகிறேன் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அப்பாற்பட்டதா திமுக அரசு? விளாசும் இபிஎஸ்
100 பேர் கூட இல்லாத டாக்டர் ராமதாஸ் டெல்லி போராட்டம்..! ஒங்கும் அன்புமணி கை