பாமகவில் மாநில செயற்குழு உறுப்பினர் உள்ளிட்ட 3 பேர் அதிரடி நீக்கம்.. ஜி.கே.மணி அறிவிப்பு.!

Published : Feb 12, 2022, 07:22 AM IST
பாமகவில்  மாநில செயற்குழு உறுப்பினர் உள்ளிட்ட 3 பேர் அதிரடி நீக்கம்.. ஜி.கே.மணி அறிவிப்பு.!

சுருக்கம்

பாட்டாளி மக்கள் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபட்டு வந்தததால்  அக்கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் உள்ளிட்ட 3 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

பாட்டாளி மக்கள் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபட்டு வந்தததால்  அக்கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் உள்ளிட்ட 3 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகின்ற 19ம் தேதி  ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சியினரும், சுயேட்சை வேட்பாளர்களும் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியிலிருந்த பாஜக மற்றும் பாமக ஆகிய இரண்டு கட்சிகளும் இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை தனித்து சந்திக்கிறது. இதனால், அந்தந்த கட்சிகள் தங்களது தேர்தல் பணிகளை மும்முரமாக செய்து வருகின்றன. இந்நிலையில், பாமகவை சேர்ந்த மாநில செயற்குழு உறுப்பினர் கண்ணன் உள்ளிட்டோர் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து பாமக தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிவிப்பில்;-கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயிலைச் சேர்ந்த மாநில செயற்குழு உறுப்பினர் கா. கண்ணன், ஜெ. செல்வம் என்கிற தமிழ்ச்செல்வன், மேல பழஞ்சநல்லூரைச் சேர்ந்த க. வரதன் ஆகியோர் பாட்டாளி மக்கள் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபட்டு வருவதால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், பசுமை நாயகர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் ஒப்புதலுடன் அவர்கள் மூவரும் நீக்கப்படுகிறார்கள். அவர்களுடன் பட்டாளி மக்கள் கட்சியினர்  எந்த வகையில் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்கின்றனர். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!