20 லட்சம் பணத்திற்காக மாற்றுத் திறனாளி இளைஞர் கொலை.. தலையணை வைத்து நண்பர்களே கொன்றது அம்பலம்.

Published : Feb 10, 2021, 05:35 PM IST
20 லட்சம் பணத்திற்காக மாற்றுத் திறனாளி இளைஞர் கொலை..  தலையணை வைத்து நண்பர்களே கொன்றது அம்பலம்.

சுருக்கம்

ஆனால் அவர் கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் இதய பிரச்சனை காரணமாக விக்னேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியதை பயன்படுத்தி விக்னேஷை கொலை செய்ய ஆறுமுகசாமியும் நானும் திட்டமிட்டோம்.. 

விருதுநகர் ராஜபாளையம் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ்(32). மாற்று திறனாளியான இவர் கடந்த 1 மாதத்திற்கு முன்பு சென்னை ஈக்காட்டு தாங்கல் அச்சுதன் 3வது தெருவில் வீடு எடுத்து ஐடி கம்பெனியில் பணிபுரிந்து வந்துள்ளார். 

விக்னேஷை கவனிப்பதற்காக தென்காசி மாவட்டத்தை சேர்ந்த ஆறுமுகம்(30) என்பவர் சம்பள அடிப்படையில் விக்னேஷ்யுடன் தங்கி பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று காலை விக்னேஷ் அறையில் இறந்துகிடப்பதாக உறவினருக்கு தகவல் அளித்துள்ளார். மேலும் கிண்டி போலீசாருக்கும் தகவல் அளித்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விக்னேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

பின்னர் சந்தேக மரணம் என போலீசார் வழக்குபதிவு செய்து ஆறுமுகத்திடம் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில் விக்னேஷிற்கு ஏற்கெனவே இதய கோளாறு பிரச்சனை இருந்து வந்ததாகவும், இது தொடர்பாக பல மாதங்களாக விக்னேஷ் சிகிச்சை பெற்று வருவதாகவும் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம் என போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

விக்னேஷின் முகத்தில் காயம் இருந்ததால் சந்தேகமடைந்த போலீசார் ஆறுமுகத்திடம் கிடுக்குபிடி விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. மாற்று திறனாளியான விக்னேஷிற்கு வங்கி கணக்கில் 20 லட்ச ரூபாய் வரை இருந்ததை அறிந்து, அந்த பணத்தை அபகரிக்க முயல திட்டமிட்டோம். இதனால் தனது நண்பரான நாராயணசாமி என்பவருடன் சேர்ந்து 20லட்ச ரூபாய் பணத்தை அபகரிக்க விக்னேஷிற்கு கொலை மிரட்டல் கடிதம் அனுப்பினோம். ஆனால் அவர் கண்டுகொள்ளவில்லை. 

இந்த நிலையில் சமீபத்தில் இதய பிரச்சனை காரணமாக விக்னேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியதை பயன்படுத்தி விக்னேஷை கொலை செய்ய ஆறுமுகசாமியும் நானும் திட்டமிட்டோம். நேற்று விக்னேஷ் வீட்டில் உறங்கி கொண்டு இருக்கும்போது தலையணையை  வைத்து விக்னேஷின் முகத்தில் அழுத்தி கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தனர். பின்னர் இதய பிரச்சனை காரணமாக விக்னேஷ் இறந்ததாக நாடகமாடியதாக தெரிவித்தனர். பணத்திற்காக கொலை செய்த ஆறுமுகசாமி மற்றும் தூண்டியதாக அவரது நண்பர் நாராயணசாமியை போலீசார் கைது செய்தனர். மேலும் பிரேத பரிசோதனை அறிக்கைக்காக போலீசார் காத்திருப்பதாக தெரிவித்துள்ளனர். 20லட்ச ரூபாய் பணத்திற்காக நண்பனை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!