
சேரன் நேரடி தாக்கு...ஆர்.கே நகர்,அசோக் நகர்,கே.கே நகர் எங்கனாலும் நிக்கட்டும்..அதுக்குமுன்னாடி பதவி விலகு...
ஆர்.கே நகர் இடைதேர்தலில் நடிகர் விஷால் போட்டியிடுவதற்கு முன்,தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என கூறி இயக்குநர் சேரன் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளார்.
சேரன் முன்வைக்கும் கருத்து என்ன ?
ஆர்.கே நகர் இடைதேர்தலில் நடிகர் விஷால் போட்டியிடுவதற்கு தயாரிப்பாளர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
1230 உறுப்பினர்கள் கொண்ட,தமிழ் திரைப்படம் தயாரிப்பாளர் சங்க தலைவராக இருக்கும் விஷால்,எதை பற்றியும் கவலை படாமல் சுயநலமாக முன்னேற அரசியலில் குதித்து உள்ளார்..
இதனால்,பாதிப்புகள் ஏற்படும்....கேபிள் திருட்டு முதல் எத்தனையோ பிரச்சனை சங்க உறுப்பினர்களுக்கு இருக்கும் போது எதை பற்றியும் கவலை படாமல், நடிகர் சங்க பொதுச்செயலாளர், பின்னர் தயாரிப்பாளர் சங்க தலைவர்....இப்ப ஆர்.கே நகர் இடைதேர்தல்.....இப்படி தாவிகிட்டே இருந்தா எதுலயும் கவனம் செலுத்த முடியாது.
இதனால் பாதிக்கப்படுவதோ, 24 சங்கங்களின் தலைவர், விநியோகஸ்தர்கள் முதல் போஸ்டர் ஒட்டும் தொழிலாளி வரை பாதிக்கப் படுவார்கள் என தெரிவித்தார்
அரசிடமிருந்து பெற கூடிய எந்த மானியமும் கிடைக்கவில்லை. அதற்கான எந்த முயற்சியையும் விஷால் எடுக்கவில்லை,ஆனால் ஊடகங்களில் அடிக்கடி சுயநலத்திற்காகவும் பணத்திற்காகவும் தொடர்ந்து பேசி அனைத்து அரசியல் கட்சிகளிடம் வெறுப்பை சம்பாதித்து வந்தால், எப்படி எங்களுக்கு பலன் கிடைக்கும்.அரசாங்க சலுகைகள் கிடைக்கும்.. எனவே ஆர்.கே நகர், அசோக் நகர்,கே.கே நகர் எங்கனாலும் விஷால் நிக்கட்டும்..அதுக்குமுன்னாடி பதவி விலகட்டும் என அனைத்து தயாரிப்பாளர்களின் சார்பாக எதிர்ப்பு தெரிவித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளார்
அவ்வாறு பதவி விலகவில்லை என்றால்,தயாரிப்பாளர் சங்கம் சார்பாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இயக்குநர் சேரன் தெரிவித்தார்.