ராஜராஜ சோழன் என் விமர்சனத்தை ஏற்று உரையாட வந்திருப்பார்... இயக்குநர் பா. ரஞ்சித் மீண்டும் அதிரடி!

By Asianet TamilFirst Published Jul 26, 2019, 9:45 AM IST
Highlights

 "இங்கே குறிப்பிட்ட சிலரிடம் மட்டுமே ஏன் நிலம் உள்ளது? எங்களிடம் நிலம் ஏன் இல்லை என ஆராய்ந்தே பேசினேன். என்னுடைய பேச்சு பிறரை கோபப்படுத்தி இருந்தால், எதிர்ப்பவர்களிடம்தான் தவறு உள்ளது. என் மீது தவறு இல்லை” என்று பா. ரஞ்சித் தெரிவித்தார்.
 


ராஜராஜ சோழன் தற்போது உயிருடன் இருந்திருந்தால், என்னுடைய விமர்சனத்தை ஏற்று உரையாட வந்திருப்பார் என்று இயக்குநர் பா. ரஞ்சித் அதிரடியாகக் கருத்து தெரிவித்துள்ளார்.
தஞ்சை அருகே உள்ள திருப்பனந்தாளில்  கடந்த மாதம் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் சினிமா இயக்குநர் பா. ரஞ்சித் பங்கேற்றார். அப்போது, தஞ்சையை ஆண்ட ராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தில்தான் தலித்துகளில் நிலங்கள் பறிக்கப்பட்டன என்று குறிப்பிட்டுப் பேசினார். பா. ரஞ்சித்தின் இந்தப் பேச்சு சர்ச்சையானது. அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டன. தற்போது இந்த வழக்கில் அவருக்கு முன்ஜாமீன் வழங்கியுள்ளது நீதிமன்றம். திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் கையெழுத்துப்போட்டு வந்தார் வந்தார் பா. ரஞ்சித்.


இந்நிலையில் சென்னை சேத்துப்பட்டில் புத்தக விழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்று பேசிய அவர், “மாமன்னர் ராஜராஜ சோழன் குறித்து நான் பேசியதை மறுக்கவில்லை. ராஜராஜ சோழன் தற்போது உயிருடன் இருந்திருந்தால், என்னுடைய விமர்சனத்தை ஏற்று உரையாட வந்திருப்பார். இங்கே குறிப்பிட்ட சிலரிடம் மட்டுமே ஏன் நிலம் உள்ளது? எங்களிடம் நிலம் ஏன் இல்லை என ஆராய்ந்தே பேசினேன். என்னுடைய பேச்சு பிறரை கோபப்படுத்தி இருந்தால், எதிர்ப்பவர்களிடம்தான் தவறு உள்ளது. என் மீது தவறு இல்லை” என்று பா. ரஞ்சித் தெரிவித்தார்.
ஏற்கனவே பா. ரஞ்சித்தின் பேச்சு சர்ச்சையான நிலையில், அவருடைய இந்தப் பேட்டியும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

click me!