பாஜக, தேமுதிக வேண்டவே வேண்டாம் !! கழற்றிவிட்ட எடப்பாடி பழனிசாமி !!

By Selvanayagam PFirst Published Jul 26, 2019, 9:14 AM IST
Highlights

வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்ய பாஜக மற்றும் தேமுதிக கட்சியினருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தடைவிதித்துள்ளதாக கூறப்படுகிறது.
 

கடந்த ஏப்ரலில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் இருக்கும் 39 தொகுதிகளில் 38 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. அதில் 37 இடங்களை திமுக கைப்பற்றி மாபெரும் வெற்றி பெற்றது. 

அதிமுக கூட்டணி தேனி தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது. இதனால் ஆளும் அதிமுக அரசுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. வேலூர் தொகுதியில் பணப்பட்டுவாடா காரணமாக தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது. 

இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வேலூர் தொகுதியில் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதை தொடர்ந்து திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்தது. 

இந்த தொகுதியில் திமுக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் துரைமுகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார்.  அதிமுக சார்பாக புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார்.

நாம் தமிழர் கட்சி சார்பாக தீப லட்சுமியும் போட்டியிடுகிறார். ஆனால் அமமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சிகள் இத் தேர்தலில் போட்டியிடவில்லை.

வேலூர் தொகுதியில்  இஸ்லாமியர்களின் வாக்குகள் அதிகம் இருப்பதால் பாஜகவினரை தேர்தல் பணியில் ஈடுபடுத்த அதிமுக தலைமை யோசிப்பதாக கூறுகின்றனர். பாஜகவை தேர்தல் பணியில் ஈடுபடுத்தினால் சிறுபான்மையினரின் ஆதரவு அதிமுகவிற்கு சுத்தமாக கிடைக்காது என்பது அவர்களது வியூகம்.

மேலும் தேமுதிக தலைமை மீது அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அதிருப்தியில் இருப்பதால் தேமுதிகவையும் வேலூர் தேர்தல் பணியில் ஈடுபடுத்த அதிமுக தயங்குவதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில வேலூர் தொகுதியில் இருக்கும் ரஜினி மக்கள் மன்றத்தினரை இழுக்க அதிமுக முயற்சி எடுத்து வருவதாகவும், ஏ.சி.சண்முகம் இதற்கான பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

click me!