
சர்ச்சைக்குரிய வசனங்களை வைத்தால் மெர்சல் படம் போல பாஜகவின் எதிர்ப்பால் எப்படியும் படம் வசூலை அல்லோ அல்லுன்னு அல்லும் என நினைத்த இயக்குனர் பாலாவிற்கு பாஜக தலைவர்கள் ஏமாற்றத்தை கொடுத்துள்ளதால் இயக்குனர் அப்செட்டில் இருக்கிறாராம்.
விஜய் நடித்த மெர்சல் படத்தில் டிஜிட்டல் இந்தியா, ஜிஎஸ்டி, ஏழைகளுக்கு மருத்துவம் மறுக்கப்படுதல், ஆக்ஸிஜன் இல்லாமல் குழந்தைகள் இறந்தது போன்ற பாஜக ஆட்சியின் அவலங்களை போகிற போக்கில் சுட்டிக் காட்டி காட்சிகள் வைத்திருந்தனர். அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான மெர்சல் திரைப்படத்தில், ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா போன்ற மத்திய அரசின் திட்டங்களுக்கு எதிரான வசனங்கள் வைத்திருந்தனர்.
'எங்க ஊரில் பணமேயில்லை, எல்லாம் டிஜிட்டல்தான். ஒரே கியூதான்' என்று கிழிந்த பர்சை வடிவேலு கதாப்பாத்திரம் காட்டுவது, 'என்ன இந்த ஐநூறு ரூபாயும் செல்லாதுன்னு சொல்லிட்டாங்களா' என்பது போன்ற வசனம் ஆகியவை மெர்சலில் இருந்தது.
சிங்கப்பூரில் ஜிஎஸ்டி வரி குறைவாக இருப்பதாகவும், 28 சதவீதம் ஜிஎஸ்டி வசூலிக்கும் இந்தியாவில் இலவச மருத்துவ உதவிகள் அனைவருக்கும் கிடைப்பதில்லை என்றும் விஜய் பஞ்ச் பேசும் காட்சிகளும் படத்தில் இடம்பெற்றது. மத்திய அரசு திட்டங்களுக்கு எதிராக காட்சிகள் இருந்த நிலையில், "விஜய் படம் மட்டுமல்ல, எந்தப் படத்தில் ஜிஎஸ்டி பற்றி கூறப்பட்டிருந்தாலும், பாஜக கருத்துக்களை முன்வைக்கும்," என தமிழிசை ட்விட்டினார். 'மெர்சல்' படத்தில் இடம் பெற்றுள்ள ஜி.எஸ்.டி. வரி பற்றிய காட்சிகளை நீக்காவிட்டால் வழக்கு தொடரப்படும் என பகிரங்கமாக பேசினார். இதனிடையே சோஷியல் மீடியாவில் விஜய் பேசிய வசனங்களுக்கு ஆதரவாக கருத்துக்கள் வந்தது. பாஜக தேசிய தலைவர் தமிழிசை என ஒட்டுமொத்தமாக வருத்தேடுத்தனர் வலைதள வாசிகள் வருத்தெடுத்து வந்தனர்.
இப்படத்தில் அரசியல் ரீதியில் சர்ச்சையை ஏற்படுத்தியதால் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்தது. அதுவும் பாஜக தலைவர்கள் எதிர்த்ததால் படத்தில் அப்படி என்னதான் இருக்கு என பார்க்க மக்களிடையே ஆர்வம் அதிகரித்தது. இந்த ஆர்வத்தின் வெளிப்பாடாக ரிலீஸான ஒரே வாரத்தில் 170 கோடி ரூபாய் வசூல் செய்தது. பாஜக தலைவர்களின் கருத்தால் தான் படம் பெரும் ஹிட்டானதாக சமூக வலைதளங்களில் கருத்து எழுந்தது.
மெர்சல் படத்தின் பிரமாண்ட வெற்றியை மனதில் வைத்துக் கொண்ட இயக்குனர் பாலா தான் இயக்கி வெளியாகியிருக்கும் நாச்சியார் படமும் மெர்சல் படத்தைப் போல பாஜகவிற்கு எதிரான வசனத்தை வைத்தால் தமிழகத்தில் எழும் எதிர்ப்பால் படம் மெர்சலைப் போல வசூலை அல்லும் என நினைத்து நாச்சியார் படத்தில் குற்றவாளிகளைத் தாக்கிவிட்டு தே..ப் பயலுகளா என ஜோதிகா பேசுய வசனம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இயக்குனர் பலவும் இதையேத்தான் எதிர் பார்த்தார் ஆனால் விஷயம் பெரியதாக எழவில்லை, இதற்கடுத்து தற்போது படம் வெளியான நிலையில் படம் வெளியீட்டுக்கு முந்தைய நாள் வேறொரு வசனம் வைத்து சர்ச்சையில் சிக்கி உள்ளது.
'கோயிலா இருந்தாலும் குப்பை மேடாக இருந்தாலும் எங்களுக்கு ஒன்றுதான்' என ஜோதிகா பேசியது தான் சந்த சர்ச்சை பேச்சு. படம் வெளியாகி இரண்டு தினம் ஆகிறது ஆனால் இன்னும் தமிழக பாஜக தலைவர்களிடமிருந்து எந்த எதிர்ப்பும் வராததால் இயக்குனர் பாலா கொஞ்சம் அப்செட்டில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராஜா, தமிழிசை உள்ளிட்டோர் எப்படியும் பிரச்சனை செய்வார் என எதிர் பார்த்த நிலையில், ஓசியா விளம்பரம் பண்ண நாங்க தயாராக இல்லை என சொல்லாமல் சைலன்ட்டாக இருக்கிறது தமிழக பாஜக என வலைதளங்களில் கிண்டலாக மீம்ஸ் வெளியாகியிருக்கிறது.