கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு தான்... திமுகவை வசைபாடிய திண்டுக்கல் சீனிவாசன்..!

Published : Jul 16, 2021, 10:58 AM IST
கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு தான்... திமுகவை வசைபாடிய திண்டுக்கல் சீனிவாசன்..!

சுருக்கம்

பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஏமாற்றிய திமுகவிற்கு நல்ல பாடம் புகட்டுவார்கள் என்று நம்பிக்கை இருக்கிறது

திமுக அரசானது கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு தான் என்பது போல இருக்கிறது என அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

 திண்டுக்கல் மாவட்டம், தும்மலக்குண்டுவில் அதிமுக சார்பில் கொரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கும் விழாவில் முன்னாள் அமைச்சரும், மேற்கு மாவட்ட கழக செயலாளருமான திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டார். 

அப்போது பேசிய அவர், ''திமுக அரசானது கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு தான் என்பது போல இருக்கிறது. தேர்தலின் போது கூறிய நீட் தேர்வு ரத்து, குடும்பத் தலைவிக்கு மாதா மாதம் ரூ.1,000, மானிய விலையில் சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி, ஓய்வூதியம் ரூ.1,500ஆக உயர்வு, பேரூராட்சிகளில் 100 நாட்கள் வேலை திட்டம் என எதையும் இதுவரை நிறைவேற்றவில்லை. இதேபோல் தான் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து வெற்றி பெற்றுள்ளனர்.

அதிமுக அப்படியில்லை. சொன்னதைத் தான் செய்தது. நமது கழகம் வெற்றி பெற்றிருந்தால் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் கழக ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் நிறைவேற்றி இருப்பர். அதிமுக ஆட்சியில் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்தவுடனே மின்வெட்டு அதிகரித்துவிட்டது.

இதையெல்லாம் மக்கள் உணர வேண்டும். வரும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவிற்கு மீண்டும் ஆதரவளிக்க வேண்டும். பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஏமாற்றிய திமுகவிற்கு நல்ல பாடம் புகட்டுவார்கள் என்று நம்பிக்கை இருக்கிறது’’ என அவர் தெரிவித்தார். 

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: அக்டோபரில் ரூ.2,500 வரப்போகுதா? முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் அடுத்த ஜாக்பாட்!
Thaimaman Thanga Modhiram Scheme: தாய்மாமன் தங்க மோதிரம் - யார் தகுதி? என்னென்ன ஆவணங்கள் தேவை?